Advertisement

கால்பந்து: ஜிம்பாப்வேக்கு கோப்பை

தென் ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 'காசாபா' கோப்பை கால்பந்து தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. இதில் ஜிம்பாப்வே, ஜாம்பியா, தான்சானியா உள்ளிட்ட 8 அணிகள் லீக் சுற்றில் மோதின. போகெங்க் பகுதியில் நடந்த பைனலில் ஜிம்பாப்வே, ஜாம்பியா அணியை சந்தித்தது. ஜிம்பாப்வே அணி சார்பில் மட்சிவா (2வது நிமிடம்), டேலான்ட் (57), மசாரே (67) தலா ஒரு கோல் அடித்தனர். எதிரணி சார்பில் மன்டியா (39) மட்டும் பதிலடி தந்தார். முடிவில், ஜிம்பாப்வே அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.

டென்னிஸ்: பிலிப் சாம்பியன்

கனடாவில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் கனடாவின் பிலிப் பெலிவோ, அமெரிக்காவின் மார்கசை எதிர் கொண்டார். இதில், பிலிப் 7-6, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.

கூடைப்பந்து: கனடா அபாரம்

உலக கோப்பை கூடைப்பந்து சாம்பியன்ஷிப்(19 வயதுக்குட்பட்டோர்) எகிப்தில் நடந்தது. கனடா, அர்ஜென்டினா, அமெரிக்கா உள்ளிட்ட 12 அணிகள் மோதின. இதன் பைனலில் கனடா, இத்தாலி அணியை எதிர் கொண்டது. துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கனடா அணி 79-60 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.

* வெண்கலத்திற்கான போட்டியில் அமெரிக்கா 96-72 என ஸ்பெயின் அணியை தோற்கடித்தது.

ஸ்னுாக்கர்: சீனா ஆதிக்கம்

சீனாவில் உலக கோப்பை ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. பைனலில் சீன 'ஏ' அணி, இங்கிலாந்தை சந்தித்தது. சிறப்பாக செயல்பட்ட டியாங், லியாங் அடங்கிய சீன 'ஏ'அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது.

கோல்ப்: டிரிஸ் அசத்தல்

அமெரிக்காவில் பெண்களுக்கான சீனியர் எல்.பி.ஜி.ஏ., கோல்ப் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் சுவீடனின் ஹெலன், அமெரிக்காவின் மிக்காலே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இங்கிலாந்தின் டிரிஸ் ஜான்சன் 212 புள்ளிகளுடன் முதலிடம் வென்று கோப்பை கைப்பற்றினார்.



Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement