Advertisement

எட்டாக்கனியான 'மினி': 'கத்துக்குட்டி' போல ஆடிய இந்திய அணி

ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல் 'கத்துக்குட்டி' அணி போல மட்டமாக ஆடினர். கோஹ்லி, தோனி, யுவராஜ், ரோகித் சர்மா என அனைவருமே சொதப்பினர். பவுலர்களும் ஏமாற்ற, இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது. ஜமான் சதம் கைகொடுக்க, 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

இங்கிலாந்தில் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர்(மினி உலக கோப்பை) நடந்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி 'பவுலிங்' தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் ரயீசிற்கு பதில் முகமது ஆமிர் மீண்டும் இடம் பெற்றார்.

'சூப்பர்' துவக்கம்:

பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான், அசார் அலி சேர்ந்து கலக்கல் துவக்கம் தந்தனர். 4 ரன்னில் கண்டம் தப்பிய ஜமான், அதற்கு பிறகு விஸ்வரூபம் எடுத்தார். மறுபக்கம் அசாரும் பட்டையை கிளப்ப, பாகிஸ்தான் அணி 9.2 ஓவரில் 50 ரன்களை கடந்தது. ஜடேஜா பந்தில் ஒரு ரன் எடுத்த அசார் அலி அரைசதம் எட்டினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜமானும் அரைசதம் கடந்தார். இவர்கள், இந்திய பந்துவீச்சை சிதறடிக்க, 'ஸ்கோர்' வேகமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் அசார் அலி(59) ஒருவழியாக ரன் அவுட்டாக, துாங்கி வழிந்த இந்திய ரசிகர்கள் லேசாக நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

ஜமான் சதம்:

இதற்கு பின் ஜமான் ரன் மழை பொழிந்தார். ஜடேஜா, அஷ்வின் ஓவர்களில் பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்டார். அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி முதல் சதம் எட்டினார். பாண்ட்யா பந்தை துாக்கி அடித்த ஜமான்(114), ஜடேஜாவின் கலக்கல் 'கேட்ச்சில்' காலியாக, நிம்மதி பிறந்தது. அடுத்து பாபர் அஜாம் ரன் வேட்டையை தொடர்ந்தார். புவனேஷ்வர் 'வேகத்தில்' மாலிக்(12) அவுட்டானார். ஜாதவ் 'சுழலில்' பாபர்(46) சிக்கினார்.

கடைசி கட்டத்தில் ஹபீஸ், இமாத் வாசிம் சேர்ந்து விரைவாக ரன் சேர்த்தனர். நமது பவுலர்கள் தொடர்ந்து சொதப்ப, ரன் வேகத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஜாதவ் ஓவரில் ஹபீஸ், வாசிம் தலா ஒரு சிக்சர் அடித்தனர். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் ஹபீஸ் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. ஹபீஸ்(57), இமாத் வாசிம்(25) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆமிர் மிரட்டல்:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு முகமது ஆமிர் 'வேட்டு' வைத்தார். சூதாட்ட சர்ச்சை, முதுகு பிடிப்பு போன்ற பிரச்னைகளை கடந்த இவர் 'டாப்-ஆர்டரை' அப்படியே தகர்த்தார். இவர் 'வேகத்தில்' மிரட்ட, ரன் கணக்கை துவக்கும் முன், இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இவரது முதல் ஓவரில் ரோகித் சர்மா(0) அவுட்டானார். அடுத்த ஓவரில் இன்னொரு அதிர்ச்சி கொடுத்தார். மூன்றாவது பந்தில் கோஹ்லி கொடுத்த 'கேட்ச்சை' முதல் 'ஸ்லிப்பில்' நின்ற அசார் அலி கோட்டைவிட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கோஹ்லி வீணாக்கினார். அடுத்த பந்து, இவரது பேட்டில் பட்டு 'எட்ஜ்' ஆக 'பாய்ன்ட்' திசையில் நின்ற ஷதாப் கான் கச்சிதமாக பிடிக்க... ஆமிர் ஆர்ப்பரிக்க..கோஹ்லி(5) பெவிலியன் திரும்பினார்.

தவானும்(21), ஆமிரிடம் வீழ்ந்தார். அடுத்து வந்தவர்களும் பொறுப்பற்ற 'ஷாட்' அடித்து வெறுப்பேற்றினர். ஷதாப் கான் வலையில் 'ரிவியு' முறையி்ல் யுவராஜ் (22) சிக்கினார். ஹசன் அலி பந்தை வீணாக துாக்கி அடித்த தோனியும்(4) ஒதுங்கிக் கொள்ள, இந்தியா 13.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து தத்தளித்தது. ஜாதவ்(9) ஏமாற்றினார்.

பாண்ட்யா ஆறுதல்:

கடைசி கட்டத்தில் ஷதாப் கான் ஓவரில் 'ஹாட்ரிக்' சி்க்சர் அடித்த ஹர்திக் பாண்ட்யா, 32 பந்தில் அரைசதம் எட்டி ஆறுதல் அளித்தார். ஜமான் ஓவரிலும் இரண்டு சிக்சர் அடித்த இவர், 76 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணியின் கதை முடிந்தது. வீட்டிற்கு திரும்பும் அவசரத்தில் இருந்த ஜடேஜா(15) விரைவாக கிளம்பினார். அஷ்வின்(1), பும்ரா(1) நடையை கட்ட, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஜமான் வென்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • banu - kanchipuram,இந்தியா


  chuma kuraisolathnga idhe dhonium yuvium six adichi win panirutha acts of dhoni acts of yuvinu solirupnga oruthar success ah matum kondadra nama tholvium aethukanum .

 • loganathan - kuala lumpur,மலேஷியா


  எத்தனை பெட்டிகல் வாங்கினீங்க

 • sultan - Dindigul,இந்தியா


  Very shame to Indian cricketers need to throw away Dhoni, Yuvaraj and Jadeja.

 • pandian - madurai,இந்தியா


  அதே அணி என்ற சக்ஸஸ் போர்முலா என்று சொல்லி திரிவதை விட வேண்டும். அஸ்வினுக்கு பதில் சாமி சேர்க்க பட்டிருக்க வேண்டும். யுவி, ஜாதவ் வைத்து சமாளித்திருக்க முடியும். யுவி, டோனி பதில் சொல்லியே ஆக வேண்டும். பாண்டியா, குமாருடன் ஏன் பந்து வீச வில்லை? மூன்று ஓவர்களில்பந்து வீச்சாளரை மாற்றி பார்க்க வேண்டும். (பேட்டிங் களத்தில் (பிட்ச்)மட்டும் ) நியூஸிலாந்து ஒவ்வொருஐந்துஓவர்களில்மாற்றுவதை பாருங்கள். ஜாதவ்கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டார். இருபது ஓவர்கள் வீணாக இருந்தன. 70 ரன் வித்தியாசத்திலும் தோற்கலாம்

 • DR VAITHYANATHAN - Please Select,இந்தியா


  Virat Koil has to step down from Captain immediately for the following reasons 1. Won the Toss and wrongly elected to bowl at a very important game 2. Using Ashwin instated of fast bowler 3. Not using Jadav in the middle over to break the partnership 4. No field placement while Ashwin and Jagega Bowling, Very easy single for all the balls 5. Bhuvenshwar Kumar not used in the middle of the innings 6. Not listen any one about the placement of fielders and changing of bowlers 7. Not change the batting order when there is a crisis. Send Jadav or Pandiya second or third down 8. Keeping Yuvi in the squad is big mistake. He gave more runs due is misfield 9. Virat is giving catch practice to Pakistan Players in our innigns . Very Shame 10. Yuvi, Ashwin and Jadega to give rest for one year 11. Develop new young team under Rohit or Rahene under the guidance of Dhoni.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement