Advertisement

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி உணரவில்லை.' டாஸ்' வென்ற இவர், தவறாக 'பவுலிங்' தேர்வு செய்தார். இதனை பயன்படுத்திய பாண்டிங் சதம் அடிக்க, ஆஸ்திரேலியா 50 ஓவரில் 359/2 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கோப்பையை கோட்டைவிட்டது. இதே போல நேற்று 'டாஸ்' வென்ற கோஹ்லியும் தவறாக பவுலிங் தேர்வு செய்தார். இம்முறை ஜமான் சதம் அடிக்க, இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது.

'நோ-பால்' பும்ரா

இந்திய அணிக்கு நேற்று 'வில்லனாக' மாறினார் பும்ரா. இவர், போட்டியின் 4வது ஓவரில் வீசிய பந்தை பகர் ஜமான் அடிக்க, அதை தோனி பிடிக்க, அவுட்டானார். ஆனால், 'ரீப்ளே'யில்' நோ-பால்' என தெரிய வர இந்திய ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கின. ஜமான் மீண்டும் களத்திற்கு திரும்பினார். அப்போது 4 ரன் எடுத்திருந்த இவர், கடைசியில் சதம் அடித்து இந்திய அணிக்கு தொல்லை தந்தார். கடைசி கட்டத்திலும் 'நோ-பால்' வீசி கடுப்பேற்றினார் பும்ரா.

சொதப்பல் கேப்டன்சி

கேப்டனாக கோஹ்லியின் வியூகங்கள் ஏமாற்றம் அளித்தன. அஷ்வின், ஜடேஜாவை பாகிஸ்தான் பவுலர்கள் பதம் பார்த்த நிலையில், ஜாதவை முன்னதாக அழைக்க தவறினார். மிகவும் தாமதமாக 39வது ஓவரில் தான் ஜாதவிற்கு வாய்ப்பு தந்தார். அவரும் பாபரை அவுட்டாக்கி நம்பிக்கை தந்தார். 'விரட்டு மன்னன்' என்று பெயர் பெற்ற கோஹ்லி இமாலய இலக்கை சேஸ் செய்ய வேண்டிய நிலையில் ஏமாற்றினார். ஒரு முறை கண்டம் தப்பிய இவர், அதை பயன்படுத்த தவறினார். அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே நேரத்தில் 4 ரன்னில் தப்பிய பாகிஸ்தானின் ஜமான், சதம் அடித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.

ஐ.பி.எல்., காரணமா

இந்திய வீரர்கள் பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடிய கையுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றனர். தொடர்ந்து விளையாடியதால் சோர்வடைந்த இவர்கள், இரண்டாவது இடமே பெற முடிந்தது. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்காத பாகிஸ்தான் வீரர்கள் கோப்பையை வசப்படுத்தினர்.

இது சரியா ஜடேஜா

27வது ஓவரை ஹசன் அலி வீசினார். இதன் 3வது பந்தை அருகில் தட்டி விட்டு, ஒரு ரன்னுக்காக ஓடினார். பின், திடீரென நின்றார். அதற்குள், பாண்ட்யா ஓடி வர, இரு பேட்ஸ்மேன்களும் ஒரே முனையில் நின்றனர்.

பந்தை பெற்ற ஹசன், 'பெயில்சை' தகர்க்க, பாண்ட்யா (76) பரிதாபமாக ரன்-அவுட்டானார். பவுண்டரி, சிக்சராக விளாசிய பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளி்த்து, ஜடேஜா 'பெவிலியன்' திரும்பி இருக்கலாம். அப்படி செய்திருந்தால், இந்தியாவின் தோல்வி வித்தியாசமும் சற்று குறைந்திருக்கும்.

பாடம் கற்றோம்

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,'' கோப்பை வென்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். எந்த அணியையும் வீழ்த்த முடியும் என நிரூபித்துகாட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். இத்தொடரில் எங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இதனால், பைனலில் வீழ்ந்தாலும், முகத்தில் சிரிப்புடன் உள்ளேன். இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்,'' என்றார்Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (17)

 • Balasubramanian - Mumbai,இந்தியா


  ஒட்டு மொத்த அணியையும் மாற்றி சரியாக ஆடாதவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் .பாண்டியா ,புவி இருவரைத்தவிர மற்ற எல்லோரும் ஒரு சதம் அளவுக்கு கூட உழைக்கவில்லை .

 • sankar - tiruchy,இந்தியா


  செமி பைனலில் ஜெயித்தவுடன் கும்பலே வை மட்டம் தட்டுவதாக நினைத்து கொண்டு எங்க அல்லது என் பேட்டிங் திறமைக்கு சஞ்சய் பங்கர் மட்டுமே(கும்ளேயவை காயப்படுத்த )காரணம் என்கிறார் . பைனலுக்கு சஞ்சபன்கர் தூங்கிட்டாரா ஓர் பய விளையாடலா . அறுநூறு விக்கெட் மற்றும் இந்தியாவின் பல வெற்றி மற்றும் காரணமான ஒரு இன்னிங்சில் பத்து விக்கெட் எடுத்த கும்ளேயை அவமானப்படுத்த நினைத்த கோலியை விதி அவமான படுத்தி விட்டது .

 • Vivekaanandhan - Madurai,இந்தியா


  மிக அருமையான விமர்சனம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல டாஸ் ஜெயித்து, பாகிஸ்தான் பவ்லிங்கை குறைத்து மதிப்பிட்டு, அவர்களை பேட் செய்யசொல்லியதிலேயே மேட்ச் தோல்வியை நோக்கி சென்று விட்டது. ஏற்கனவே அவர்களை வென்று விட்டோம் என்ற மமதையும் சேர்ந்து விட்டது அடுத்த உலக கோப்பை விளையாட்டுக்குள் கோலி மாற்றி யோசித்து விளையாட தயாராகினால் உழைக்க கோப்பையை வெல்லலாம்.

 • GURUMOORTHY PADMANABAN - CHENNAI,இந்தியா


  இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இந்திய கிரிக்கெட் அஸோஸியேஷனை 5 வருடங்கள் தடை செய்து வைப்பது தான். அப்போது தான் இவர்களுக்கு 100 கோடி மக்களின் உணர்வு புரியும்

 • sundaram - tirunelveli,இந்தியா


  இது அழைக்கப்பட்டு வந்த தோல்வி. டாஸ் வென்ற கோலி ஏன் பேட்டிங் தேர்வு செய்ய வில்லை. சூழல் பந்தை பாக் அணி நன்றாகவே எதிர்கொள்ளும், அஸ்வின் பந்தை நன்றாகவே அடிக்கிறார்கள் என்று தெரிந்தும் திரும்ப திரும்ப அஸ்வின்னுக்கு பந்து வீச்சு தரப்பட்டது ஏன்? நம்மவர்களுக்கு ஒரு ஓவர் என்றால் ஒன்பது பந்துகள் என்பது திரும்ப திரும்ப நடந்தது ஏன்? பாக் ஐம்பது ரன்கள் எடுப்பதற்குள் பதினோரு உதிரி ரன்கள், இது ஒரு உலகத்தரம் வாய்ந்த ஒரு அணி செய்யும் பந்து வீட்சா? நடந்தது விளையாட்டல்ல , விட்டுக்கொடுப்பு. தங்கத்தாம்பாளத்தில் வெற்றியை வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க பாக் அணிக்கு பைனலில் அளிக்கப்பட அன்பளிப்பு.

 • RAGHU - MUMBAI,இந்தியா


  Virat Kohli is only a show captain he has failed both in his captaincy as well as in his own batting strength . This was clear in World cup also and Virat is a miserable failure. The main reason for this defeat is kohli's decision to field first and also his nervousness after giving away precious runs to Pakistan. India may win or loose in match but without any hard fight India has lost to Pakistan. It is high time the ion committee has to think of a better Captain. The bowler Bumrah is an utter failure.

 • sachin - chennai,இந்தியா


  நேற்றைய போட்டியில் ஆடுகளம் இரண்டாவது பாதி முழுவதும் பேட்ஸ்மன்கள் சாதகமாக இருந்த நிலையில் இந்திய பேட்ஸ்மன்கள் பொறுப்பற்ற முறையில் நூறுகோடி மக்களின் உணர்வுகளை உணராமல் அலட்சியமாக விளையாடினர் கடந்த முப்பது ஆண்டுகளில் முக்கிய போட்டிகளில் பலமுறை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து மோசமான தோல்வி அடைந்து பல கோடி மக்களின் ஏமாற்றமடைய செயதுள்ளனர் மாறாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்ற அணைத்து போட்டிகளிலும் பேட்டிங்கை தேர்வு செயதுள்ளது இனியாவது திருந்துவார்களா இந்தியா கேப்டன்கள் ?

 • DR VAITHYANATHAN - Please Select,இந்தியா


  Virat Koil has to step down from Captain immediately for the following reasons 1. Won the Toss and wrongly elected to bowl at a very important game 2. Using Ashwin instated of fast bowler 3. Not using Jadav in the middle over to break the partnership 4. No field placement while Ashwin and Jagega Bowling, Very easy single for all the balls 5. Bhuvenshwar Kumar not used in the middle of the innings 6. Not listen any one about the placement of fielders and changing of bowlers 7. Not change the batting order when there is a crisis. Send Jadav or Pandiya second or third down 8. Keeping Yuvi in the squad is big mistake. He gave more runs due is misfield 9. Virat is giving catch practice to Pakistan Players in our innigns . Very Shame 10. Yuvi, Ashwin and Jadega to give rest for one year 11. Develop new young team under Rohit or Rahene under the guidance of Dhoni.

 • kowsick rishi - chennai,இந்தியா


  நான் ஆட்டம் தொடங்கிய போதே நம் இந்திய கிரிக்கெட்டு வீரர்களின் செய்யப்பாட்டை பார்த்து சொல்லிவிட்டேன் 150 ரன் தான் என்று - ஏதோ அறனேஜ்மெண்ட் நடந்திருக்கிறது - விசாரிக்கவேண்டும் நடந்தது போட்டியே அல்ல சொல்லிவைத்து முடித்துக்கொண்ட ஆட்டம்

 • Chandran - CHENNAI,இந்தியா


  சூதாட்ட மன்னர்களிடம் போட்ட ஒப்பந்தத்தை முதலில் புவனேஷ்குமார் மற்றும் ஹர்திக் பாண்டீயா ஆகியோரிடம் சொல்லவில்லை போலிருக்கு. அதனால்தான் புவனேஷ்குமார் அருமையாக பந்து வீசினார். அனால் உண்மை தெரிந்த பிறகு அவரும் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார். அதே போல ஹர்திக் பாண்டீயாவை அவர்களால் சமாதானம் செய்ய முடியவில்லை. எனவேதான் ஜடேஜா உதவியுடன் ரன் அவுட் செய்ய வைத்து விட்டார்கள்.

 • Ganesh - Tamil Nadu,இந்தியா


  தம்பி கோலி எப்போதும் ஒன்று புரிஞ்சிகோ ஆசியா டீம் அதாவது இந்தியா பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை இவர்கள் எல்லாம் ஸ்பின் நன்றாக ஆடுவார்கள் நீங்க தென் ஆப்பிரிக்கா. வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் விளையாடும்போது இரண்டு ஸ்பின் இருக்கலாம் ஆனால் பாகிஸ்தான் அணியுடன் மோதும் போது மூன்று பாஸ்ட் கண்டிப்பாக தேவை அஸ்வின் தேவையில்லை அது போல இந்த ஜடேஜா ஆல் ரவுண்டர் என்று நீங்கள் சொல்லிக்கலாம் என்னை பொறுத்தவரை அவர் மேட்ச் வின்னர் இல்லை எப்போதும் பாகிஸ்தான் பாஸ்ட் பௌலர் அமீர் இந்தியா என்றால் வெறித்தனமாக வீசுவார் புத்திசாலி பேட்ஸ்மேன் என்றால் அவருடைய இரண்டு மூன்று ஓவர்கள் விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அவர்தான் பெருவிரல் குறிவைத்து எறிகிறார் அதை தடுத்து நிதானமாக செயல்பட்டு பின்பு ஒருகை பார்க்கலாம் அதைவிட்டுவிட்டு ரோஹித் ஐபில் மாதிரி நினைத்து ஆடுகிறார் இதே மாதிரி நிறைய சொல்லலாம் இந்தியா அணிக்கு நல்ல ஆலோசகர் தேவை என்றால் கூப்பிடுங்க நான் ரெடி

 • J Vijayakumar - CHENNAI,இந்தியா


  After match fixing scandal involved by Azarrudeen Etc, and yesterday betting amount of Rs.2000 Crores, people should shift their interest to other games growth. We havele seen ill health Yuverraj Singh who was doing batting onle was ed in place of allrouder Raina by Kohli to avoid good combination of Dhoni,Raina,Jadeja and Aswin in CT2017 supported by BCCI. Then Anil Kumble was sidelined by BCCI at the instance of Kohli has lead to downfall of Indian Team in CT2017. God only save our Cricket like Modi for India as Pm of India.

 • Kesavan R - Thuraiyur, Trichy,இந்தியா


  நம்மிடம் பௌலிங் strength இல்லாததினால் second batting தேர்வு செய்தது தவறில்லை. ஆனால் மிடில் ஓவர்களை யுவராஜ்சிங் மாதிரியான சீனியர் பிளேயர்களை பௌலிங் செய்ய வைத்திரிந்தால் இவ்வளவு பெரிய ஸ்கோர் இருக்காது. யுவராஜ்சிங், தவான் பௌலிங் செய்ய வைத்திரிந்தால் ரிசல்ட் மாறியிருக்கும்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா


  This man is For Defeat Sappai Kattu Kattugirar.Due to over confidence and under estimate of the Pakistan cricket team our team was defeated in the match.However the Indian Hockey team by winning the match gave some Aarudal to our people. We should not give more importance only to cricket but have to look all games equally. Congratulations to both Hockey and Cricket teams for their hard work put up for the games.In elections and games the Win and Defeat are common and we should not worry for our defeat in cricket and next time we will win the game.

 • karthi - trichy,இந்தியா


  எல்லாம் சூதாட்டம் . போட்டியை ப்ரோக்கேர்ஸ் முடிவு செய்து விட்டனர் . வீரர்கள் ஏமாற்றுகின்றனர் மக்களை . சிறந்த பேட்ஸ்மேன் கொண்ட இந்திய அணி இப்படி பொறுப்பு இல்லாமல் விளையாடாது குறைந்தது பொறுமையாக விளையாடி முடிந்த அளவு ஸ்கோர் எடுக்க பார்ப்பார் . எல்லாம் பணம் தான் முடிவு பண்ணுது .

 • Skanda - Chennai,இந்தியா


  The way kohli out ( thrice in a row edge) dhoni got out jadeja running out pandya all looks like Indians minted money in 1:3 odds

 • Skanda - Chennai,இந்தியா


  The odds of pak winning before the match is 1:3. I guess Indian players minted more than their prize money

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement