Advertisement

சரிந்தது இந்திய 'பேட்டிங்': பாக்., 'முதல்' சாம்பியன்

ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ரோகித், கேப்டன் கோஹ்லி, தோனி உள்ளிட்டோர் 'பேட்டிங்கில்' சொதப்ப இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பகர் ஜமான் சதம் அடிக்க, பாகிஸ்தான் அணி முதல் முறையாக கோப்பை வென்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடந்தது.

லண்டன் ஒவல் மைதானத்தில் நடந்த பைனலில், விளையாட்டு உலகின் 'பரம எதிரிகள்' என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட முகமது ஆமிர் வாய்ப்பு பெற்றார்.

பகர் சதம்:

பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி, பகர் ஜமான் ஜோடி துவக்கம் தந்தது. பும்ரா 4வது ஓவரின் முதல் பந்தை 'நோ பாலாக' வீச, பகர் கண்டம் தப்பினார். பின், இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். அரை சதம் அடித்த அசார் (59) ரன்-அவுட்டானார். தொடர்ந்து அசத்திய பகர், ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்தார். இவர் 114 ரன்களில் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார்.

சோயப் மாலிக் (12) ஏமாற்றினார். பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்தார். பின், இணைந்த ஹபீஸ், இமாத் வாசிம் அதிரடியாக ரன் சேர்த்தனர். ஹபீஸ் அரை சதம் அடித்தார். முடிவில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் எடுத்தது. ஹபீஸ் (57), வாசிம் (25) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் புவனேஷ்வர், பாண்ட்யா, ஜாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதிர்ச்சி துவக்கம்:

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே ஆமிர் 'வேகத்தில்' தொல்லை தந்தார். இவரின் முதல் ஓவரில் ரோகித் டக்-அவுட்டானார். பின், வந்த கேப்டன் கோஹ்லியும் (5) இவரிடமே சிக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஷிகர் தவான் 21 ரன்களில் அவுட்டானார். ஷாதப் 'சுழலில்' யுவராஜ் சிங் (22) வெளியேறினார்.

பாண்ட்யா ஆறுதல்:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 4 ரன்களில் 'பெவிலியன்' திரும்பினார். ஜாதவ் (9) நிலைக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி, ஆறுதல் அளித்தார். அரை சதம் கடந்த இவர் 76 ரன்களில் ரன்-அவுட்டானார். மற்றவர்களும் ஏமாற்ற, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.



























Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • LAKSHMIPATHI - Mumbai,இந்தியா


    Critical Analysis - A very hot and dry weather is now continuing here. So the grounds were (pitches) WERE very dry. No dampness. WHY KOHLI ELECTED TO FIELD ? Bowlers were not effective and there was no venom in any delivery. Depended on mistakes from batsman. Incidentally the first wkt of Pak was a runout. Aswin had no turn in the balls but was continued to bowl.Fielding was very lethargic. Placement needs improvement. Batting as usual was in doldrums. We

  • ranjan - paris,பிரான்ஸ்


    விராத் feelding தெரிவு செய்ததது பிழையான விடயம் டாஸ் வென்றும் பிரயோசனம் இல்லை வங்காளம்முன்னுறு ஓட்ட்ங்கள் எடுத்தபோது அடித்தபோது பாகிஸ்தான் முன்னுறு க்கு மேல் அடிப்பார்கள் என்பது யோசித்திருக்க வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement