Advertisement

பார்சிலோனா அணி 'அவுட்'

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பார்சிலோனா அணி இழந்தது. காலிறுதியில் ஜுவன்டஸ் அணியிடம் தோல்வி அடைந்து, பரிதாபமாக வெளியேறியது.

பார்சிலோனாவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கான 2வது சுற்றுப் போட்டியில் பார்சிலோனா, ஜுவன்டஸ் அணிகள் மோதின. மெஸ்சி, நெய்மர், லுாயிஸ் சாரஸ் என முன்னணி வீரர்கள் இருந்த போதும் பார்சிலோனா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில், கோல் எதுவுமின்றி போட்டி 'டிரா' ஆனது.

முன்னதாக நடந்த முதல் சுற்றில் ஜுவன்டஸ் அணி 3-0 என வென்றிருந்தது. இதனையடுத்து இரண்டு சுற்றுகளின் முடிவில் ஜுவன்டஸ் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனா அணி பரிதாபமாக வெளியேறியது. இதன்மூலம் கடந்த 2015ல் நடந்த பைனலில் பார்சிலோனாவிடம் கண்ட தோல்விக்கு ஜுவன்டஸ் அணி பதிலடி தந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement