X
Advertisement

சிந்து 'நம்பர்–3'

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை சிந்து, 3வது இடத்துக்கு முன்னேறினார்.

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்டது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து 5வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரில் காலிறுதி வரை சென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை செய்னா நேவல், 9வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார்.

சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாய் பிரனீத், ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 30வது இடத்தில் இருந்து 22வது இடத்துக்கு முன்னேறினார். பைனலுக்கு முன்னேறிய மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 8 இடங்கள் முன்னேறி 21வது இடம் பிடித்தார். இந்தியாவின் அஜய் ஜெயராம் 14வது இடத்தில் இருந்து 13வது இடத்தை கைப்பற்றினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement