Advertisement

கன்னி

குரு, சுக்கிரன், ராகு வியத்தகு நற்பலன் வழங்குவர். உங்கள் தகுதி, திறமையில் முன்னேற்றம் ஏற்படும். பலரும் வியந்திடும் வகையில் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு மங்கல நிகழ்ச்சி நடத்தலாம். தாய்வழி உறவினர் எதிர்பார்ப்புடன் பழகுவர். வாகனத்தில் உரிய பராமரிப்பு மேற்கொள்வதால் பயணம் எளிதாகும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு தேவையானதை செய்வீர்கள். விவகாரம் தீர்வு பெற சமரசப்பேச்சு வார்த்தை நல்லபலன் தரும். மனைவியின் அன்பு மனதில் நெகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரம் செழித்து பணம் சேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் உறவினர்களை நன்கு உபசரிப்பர். மாணவர்கள் படிப்பில் சிறந்து புதிய இலக்கை அடைவர்.

பரிகாரம்: மீனாட்சி வழிபாடு செல்வ வளம் தரும்.

Advertisement
 
Advertisement