Advertisement

பிறந்த நாள் பலன்கள்

வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
* புதிய முயற்சிகளில் செயல்பட மனம் விரும்பியபோதும் சூழ்நிலையின் காரணமாக தாமதப்படுத்துவீர்கள்.
* அரசு சம்பந்தப்பட்ட பணிகள் பயனுள்ளதாக அமையும்.
* உடல்நிலையில் சிறு சிரமம் இருக்கும்.
* பண வரவில் ஓரளவு திருப்தி ஏற்படும். கடன்கள் கவலை தரலாம்.
* வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.
* முக்கிய வேலையாக வெளியூர் சென்று வருவீர்கள்.
* குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.
* தொழில், வியாபார வளர்ச்சியில் தடை ஏற்பட்ட போதும் பெருமளவு பாதிக்காது.
* பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும்.
* பெண்கள் குழந்தைகள் நலனுக்காக திட்டம் வகுப்பர்.
* மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.

2, 11, 20, 29 B, K, R
* திட்டங்கள் நிறைவேறி மனநிறைவை ஏற்படுத்தும்.
* புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
* நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து மகிழ்வீர்கள்.
* அலைச்சல் காரணமாக சோர்வு ஏற்படலாம்.
* பணவரவு இருந்தாலும் செலவும் உயரும்.
* கடன்கள் கவலை தந்தாலும், கட்டுக்குள் இருக்கிறதே என ஆறுதல் அடைவீர்கள்.
* பெண்கள் விஷயத்தில் இந்த வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
* பயணங்களால் அதிக லாபம் இருக்க வாய்ப்பு குறைவு.
* தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து விற்பனை அதிகரிக்கும்.
* பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.
* பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும்.
* மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் பரிசு பெறுவர்.


3, 12, 21, 30 C, G, L, S
* வேலைகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
* சிலருக்கு கவுரவப்பதவி கிட்டும்.
* நண்பர்களிடம் பண விஷயத்தில் கவனம் இருக்கட்டும்.
* செலவுகளை சற்று யோசித்து செய்வது நல்லது.
* உடல் சிறுதொந்தரவு ஏற்பட்டு விலகும்.
* பெற்றோர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
* உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
* ஏமாறும் சூழ்நிலை உள்ளதால் பொருட்களை பத்திரமாக பாதுகாக்கவும்.
* தொழில், வியாபாரத்தில் தடைகளை சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள்.
* பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
* பெண்கள் வாழ்வில் ஒளிவீசும் வாரம்.
* மாணவர்கள் நன்றாக படிப்பர்.


4, 13, 22, 31 D, M, T
* வெளிவட்டாரத்தில் முக்கிய பிரமுகராக கருதப்படுவீர்கள்.
* பிறர் விவகாரங்களில் தலையீட்டை குறைப்பது நல்லது.
* கண் சம்பந்தப்பட்ட தொந்தரவு ஏற்படலாம். கவனம்.
* வரவு அதிகம் என்ற போதிலும் வாகன, வீடு பராமரிப்பு வகையில் செலவு ஏற்படும்.
* கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
* உறவினர்கள், நண்பர்கள் சாதகமாக இருப்பர்.
* குழந்தைகளால் புதுச்செலவு ஏற்படலாம்.
* தொழில்,வியாபாரத்தில் விரிவாக்கத்திற்கான சூழ்நிலை ஏற்படும்.
* பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
* பெண்களுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு வரலாம்.
* மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறலாம்.


5, 14, 23, E, H, N, X
* காரணமற்ற அவசரத்தால் ஏற்படும் கோபத்தை தவிர்க்கவும்.
* உடல்நிலையில் ஆரோக்கியம் கூடும்.
* வரவுகள் தாமதப்பட்டபோதும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் தடையிருக்காது.
* கடன்கள் கவலை தந்தாலும் தொந்தரவு தராது.
* குடும்ப சிக்கல்கள் ஒவ்வொன்றாக தீரும்.
* பெற்றோர் வகையில் ஒத்துழைப்பு கூடும்.
* உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
* குழந்தைகளின் வளர்ச்சி பெருமிதப்படுத்தும்.
* தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கேற்ப போட்டியும் இருக்கும்
* பணியாளர்களுக்கு எடுத்த காரியம் மளமளவென்று முடிவு பெறும்.
* பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர்.
* மாணவர்கள் நன்றாகப் படிப்பர்.


6, 15, 24, U, V, W
* தங்கள் பணிகளால் வெளிவட்டாரத்தில் மரியாதை ஏற்படும்.
* அரசாங்க, அரசியல் தொடர்பானவர்களுடன் நல்ல உறவு ஏற்படும்.
* இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவுக்கு வரும்.
* உடல்நலத்தில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.
* வருமானம் பெருக வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கடன்கள் தீரும்.
* குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்.
* தொழில், வியாபாரத்தில் லாபம் கூடுதலாகும்.
* பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும்.
* பெண்களுக்கு பொன் நகை சேர்வதால் முகத்தில் புன்னகையே.
* மாணவர்களுக்கு பொற்காலம். மதிப்பெண் அள்ளலாம்.


7, 16, 25, O, Z
* எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண்ட போதும் பாதிப்பு இருக்காது.
* புதிய திட்டங்களுக்கு தகுந்த உதவி கிடைக்கும்.
* பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள்.
* வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும்.
* உடல்நிலையில் சிறு தொந்தரவு வந்து நீங்கும்.
* பெற்றோர் வகையில் சில தொந்தரவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
* தொழில், வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டபோதும் லாபம் கூடுதலாகும்.
* பணியாளர்களுக்கு வருமானம் கூடும்.
* பெண்களுக்கு கணவருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
* மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறலாம்.


8, 17, 26, F, P
* வருமானம் இருந்தாலும் வாகனம்,
* உறவினர் வருகை, மருத்துவ வகையில் செலவு ஏற்படும்.
* உடன்பிறந்தவர்கள் விவகாரங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
* அரசு வழியில் சில தொந்தரவுகளை சந்திக்கலாம்.
* வெளிவட்டார பழக்க வழக்கங்களில் வரையறை வகுத்து கொள்வது நல்லது.
* தொழில், வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் என்றாலும் வருமானம் பாதிக்காது.
* பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* பெண்களுக்கு வீட்டுச்செலவு கூடும்.
* மாணவர்கள் சிரமப்பட்டு படித்தும், பலனில்லையே என வருந்தும் நிலை வரலாம். பாடங்களை விடாமல் படியுங்கள்.

9, 18, 27
* புதிய துறைகளில் ஈடுபட ஆர்வம் ஏற்படும்.
* பணவரவு தாராளமாக இருக்கும். ஆடம்பர, நாகரிகப் பொருள் வாங்குவீர்கள்.
* பயணங்கள் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும்.
* உடல் நிலையில் சிறு தொந்தரவு ஏற்பட்டு விலகும்.
* குடும்பத்தில் ஒற்றுமை கூடும். சொத்து
* சம்பந்தப்பட்ட வகையில் தீர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
* உடன் பிறந்தவர்களிடம் உதவியை எதிர்பார்க்க முடியாது.
* தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் கூடி வரும்.
* பணியாளர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும்.
* பெண்கள் கணவரால் மகிழ்ச்சி பெறுவர்.
* மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும் பிரகாசிப்பர்.

Advertisement
 
Outbrain
Advertisement