Advertisement

பிறந்த நாள் பலன்கள்

வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
* தெளிவாக செய்யும் செயல்களில் கூட தடங்கல் ஏற்படும்.
* கடும் முயற்சி செய்தால் தான் பொருள் வரவு சீராக இருக்கும்.
* மங்கள நிகழ்வுகள் பற்றி அடுத்த வாரம் யோசியுங்கள்.
* உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படலாம்.
* தொழிலதிபர்கள் விரிவாக்கம் செய்வர். ஆனால், எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்க வாய்ப்பு குறைவு.
* வியாபாரிகள் போட்டியாளர்களால் பிரச்னைக்கு உள்ளாகலாம்.
* பணியாளர்கள் அலுவலகத்தில் அதிகமாக பேசினால் சங்கடங்களை சந்திக்க நேரிடும்.
* அரசியல்வாதிகள் தன் கடமைகளை செவ்வனே செய்து தலைமையை மகிழ்ச்சி ப்படுத்துவது நல்லது.
* விவசாயிகள் கடன்களை கட்டுக்குள் வைத்திருப்பதால் பிரச்னைகளில் இருந்து தப்பலாம்.
* பெண்கள் தங்கள் பெண் குழந்தைகளை கண்காணிப்பது நலம்.
* மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வது சிறப்பைத்தரும்.

2, 11, 20, 29 B, K, R
* பிறர் செய்த குற்றங்களுக்காக மாட்ட நேரிடலாம். கவனம்.
* சுபநிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள் சுமூகமாக நடக்கும்.
* உடல்நலத்தில் அதிக அக்கறை கொள்ளுங்கள்.
* தொழிலதிபர்கள் துணிவான முடிவுகளை எடுத்தாலும், தொழிலாளர்களால் பிரச்னை ஏற்படலாம்.
* வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க சலுகைகளை அறிவிப்பர்.
* பணியாளர்கள் வேண்டாத இடமாறுதல் பெற வாய்ப்புள்ளதால் உயரதிகாரிகளிடம் மதிப்புடன் நடந்துகொள்ளுங்கள்.
* அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் நம்பிக்கையை பெறுவர்.
* விவசாயிகள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.
* பெண்கள் தகப்பனார் வழி உறவுகளால் மன அமைதிக்குறைவை அடைவர்.
* மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பிரச்னை வரலாம்.

3, 12, 21, 30 C, G, L, S
* பொருள் வரவுகளால் வசதி பெருகும்.
* மங்கள நிகழ்ச்சிகளை நடத்த நல்வாய்ப்பு கிடைக்கும்.
* தொழிலதிபர்கள் அளவுக்கதிகமான பணவரவை பெற வழி கிடைக்கும்.
* வியாபாரிகள் விரிவாக்கம் செய்வர்.புதிய கிளைகள் தொடங்குவர்.
* வாடிக்கையாளர்கள் பாராட்டும் வண்ணம் நடந்து கொள்வர்.
* பணியாளர்கள் பதவி உயர்வும், பணபலனும் அடைவர்.
* அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கை நிலைப்படுத்தி கொள்ள போராடுவர்.
* விவசாயிகள் பக்கத்து நில உரிமையாளர்களுடன் இணக்கமான போக்கு வைப்பது நல்லது.
* பெண்கள் சுகவாழ்விற்கான பொருட்களை வாங்கி சேர்ப்பர்.
* மாணவர்கள் தன் குடும்பத்திற்கு புகழ் சேர்ப்பர்.

4, 13, 22, 31 D, M, T
* கடினமான செயல்களை கூட எளிதில் முடித்து விடலாம் என்ற தைரியம் பிறக்கும்.
* பணம் பல வழிகளில் வந்தாலும், ஆடம்பரத்தில் கரைய வாய்ப்புண்டு.
* தொழிலதிபர்கள் எண்ணற்ற வாய்ப்புகளை பெற்று ஏற்றுமதியை விரிவுபடுத்துவர்.
* வியாபாரிகளுக்கு விற்பனை களைகட்டும்.
* பணியாளர்களின் நிலை சற்று பின்னடைவாகவே தெரிகிறது. அதிகாரிகளிடம் இணக்கமான போக்கை ஏற்படுத்தி கொள்வது நல்லது.
* அரசியல்வாதிகள் அவசரப்பட்டு எதையாவது செய்து தலைமையின் தண்டனைக்கு ஆளாகலாம்.
* விவசாயிகள் புதிய கருவிகள் வாங்குவது, கால்நடை விரிவு இவைகளை தவிர்ப்பது நலம்.
* பெண்கள் கணவரின் இணக்கமான போக்கால் நலம் பெறுவர்.
* மாணவர்கள் கடின முயற்சி மேற்கொள்வதால் மட்டுமே பலன்பெறலாம்.

5, 14, 23, E, H, N, X
* நினைத்தபடி பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருள்வரவும் காத்துக் கொண்டுள்ளது.
* மங்கள நிகழ்ச்சிகளால் மட்டற்ற மகிழ்வை பெறுவீர்கள்.
* தொழிலதிபர்கள் சாதனையாளர் விருது பெறுவதுடன் தொழிலாளர்களின்
ஆதரவையும் பெறுவர்.
* வியாபாரிகளுக்கு வேண்டிய கடன் தொகை கிடைத்து விரிவாக்கத்திற்கு வழிகாட்டும்.
* பணியாளர்கள் புதிய வாகன வசதி பெறுவர்.
* அரசியல்வாதிகள் பதவிகள் தங்களை தேடி வருவது கண்டு ஆச்சரியமடைவர்.
* விவசாயிகள் தானியங்களை கூடுதல் விலைக்கு விற்று பலன் பெறுவர்.
* பெண்கள் குழந்தைகளால் மகிழ்ச்சியும், பொருள் சேர்க்கையும் பெறுவர்.
* மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்து புகழ் பெறுவர்.

6, 15, 24, U, V, W
* எந்த செயலையும் சமயோசிதத்துடன் செய்து நற்பெயர் பெறுவீர்கள்.
* கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
* உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
* தொழிலதிபர்களுக்கு தொடர்ச்சியான நல்ல அனுபவங்களும் ஆர்டர்களும் கிடைக்கும்.
* வியாபாரிகள் பொருட்களை தேங்காமல் விற்பனைக்கு விடுப்பது சிறப்பாகும்.
* பணியாளர்கள் அதிகாரிகளிடம் பக்குவமாக நடப்பதால் வேண்டிய உதவிகளை பெறலாம்.
* அரசியல்வாதிகளுக்கு சூழ்நிலைகள் சரியாக இல்லை. தலைமை கண்காணிக்கும்.
* விவசாயிகள் நல்ல முன்னேற்றம் காண்பர்.
* பெண்களுக்கு பெருமையும், சொகுசான வாழ்வும் கிடைக்கும்.
* மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வர்.

7, 16, 25, O, Z
* சோதனைகளை கடந்து செய்த செயல்களின் பயன் கிடைக்கும்.
* தடையற்ற வருமானம் உண்டு.
* பேசி நின்றுபோன சுப நிகழ்ச்சிகள் மீண்டும் துளிர்விடும்.
* வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
* தொழிலதிபர்களுக்கு கடல் கடந்த வியாபார வாய்ப்புகள் வரும்.
* வியாபாரிகள் விரைவான முன்னேற்றம் காண்பர்.
* பணியாளர்களுக்கு நீண்ட நாள் கிடைக்காத பதவி உயர்வு, பணபலன் கிடைக்கும்.
* அரசியலில் ஈடுபட்டு நொந்து போனவர்களுக்கு புதிய பதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு முடக்கமான நிலை மாறி முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும்.
* பெண்கள் குழந்தைகளால் பெருமை பெறுவர்.
* மாணவர்கள் புதிய அத்தியாயம் படைப்பர்.

8, 17, 26, F, P
* கடினம் என்று ஒதுக்கிய வேலைகளை கூட, எளிதில் முடித்து விடுவீர்கள்.
* உடல் நிலையில் உஷ்ணம் அதிகரிக்கும்.
* பணவரவு நன்றாக இருக்கும்.
* சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு நல்ல முறையில் நடக்கும்.
* தொழிலதிபர்கள் உறுதியுடன் செயல்பட்டு உன்னதமான பலன்களை பெறலாம்.
* வியாபாரிகள் எதிர்பார்த்த கடன் தொகையும், பாக்கியும் வர, அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
* பணியாளர்களுக்கு பெண் பணியாளர்களால் பிரச்னை ஏற்படலாம்.
* அரசியல்வாதிகளின் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
* விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு விலை குறையலாம்.
* பெண்களுக்கு நகை, பணம் சேரும்.
* மாணவர்கள் தங்கள் நிலையில் உயர்வு காண்பர்.

9, 18, 27
* துரோகம் செய்த சிலரை மன்னித்து வாழ்வளிப்பீர்கள்.
* கூடுதலான ஆதாயத்திற்கு வழி கிடைக்கும்.
* சுப நிகழ்ச்சிகளில் தடங்கல் ஏற்படலாம்.
* தொழிலதிபர்கள் நல்ல லாபம் சம்பாதிப்பதுடன், விரிவாக்க முயற்சியிலும்
ஈடுபடுவர்.
* வியாபாரிகள் சக வியாபாரிகளுடன் இணக்கமான போக்கை வைத்து கொள்வதால் வீண் வம்பு வழக்குகளில் இருந்து தப்பலாம்.
* பணியாளர்கள் பண பலன்களை அதிகம் பெறலாம். இடமாற்றம் தாமதமாகும்.
* அரசியல்வாதிகள் தன் பேச்சாற்றலால் சலுகைகளை பெறலாம்.
* விவசாயிகள் விற்பனை பெருக்கத்தால் நல்ல லாபம் சம்பாதிப்பர்.
* பெண்கள் என்ன நினைத்தார்களோ அவை அனைத்தும் கிடைக்கும்.
* மாணவர்கள் மகிழ்வுடன் செயல்படுவர்.

Advertisement
 
Outbrain
Advertisement