Advertisement

மிதுனம்

சந்திரன், சுக்கிரன் ஓரளவு நற்பலன்களை வழங்குவர். தாமதமான பணிகளை நிறைவேற்ற புதிய வாய்ப்பு வரும். எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. வாகனத்தில் பராமரிப்பு செய்வதால் பயணம் எளிதாகும். பிள்ளைகளின் எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். மனைவியின் கருத்து குடும்பத்தின் நலனுக்கு பெரிதும் உதவும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து செயல்படுவர். பெண்கள் செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் கூடுதல் பயிற்சியால் சீரான மதிப்பெண் பெறலாம்.

சந்திராஷ்டமம்: 13.11.18 காலை 10:19 மணி - 15.11.18 இரவு 10:05 மணி
பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு வெற்றியளிக்கும்.

Advertisement
 
Advertisement