Advertisement

ரிஷபம்

ராகு, சந்திரனால் ஓரளவு நற்பலன் பெறுவீர்கள். மனதில் இருந்த தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். சமூக நடப்பில் புதிய அனுபவம் கிடைக்கும். பேச்சிலும் செயலிலும் இருந்த முரண்பாடு குறையும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகள் அறிவு, செயல்திறனில் மேம்படுவர். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை பயன் தரும். பணக்கடன் தொந்தரவு தரலாம். மனைவியின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் நகை இரவல் கொடுக்க கூடாது. மாணவர்கள் அக்கறையுடன் படிக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: 17.9.18 காலை 9:05 மணி - 19.9.18 இரவு 8:05 மணி
பரிகாரம்: முருகன் வழிபாடு நன்மை தரும்.

Advertisement
 
Advertisement