Advertisement

பிறந்த நாள் ஆண்டு பலன்கள்

வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
*இனிமையாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள்.
*வருமானம் திருப்தியளிக்கும். சேமிக்கவும் வாய்ப்புண்டு.
*உடல்நலனில் அக்கறை காட்டத் தொடங்குவீர்கள்.
*பெற்றோகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
*தொழிலதிபர்கள் வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடை போடுவர்.
*வியாபாரிகள் புதிய கிளைகளை நிறுவி லாபம் காண்பர்.
*பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நம்பிக்கைக்கு உரியவராவர்.
*அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும்.
*விவசாயிகள் தானிய விலையேற்றத்தால் மகிழ்ச்சி அடைவர்.
*பெண்கள் சுபவிஷயத்தில் அடிக்கடி பங்கேற்று மகிழ்வர்.
*மாணவர்கள் சுறுசுறுப்புடன் படிப்பில் ஈடுபடுவர்.2, 11, 20, 29 B, K, R
* இந்த ஆண்டு நினைத்ததை எல்லாம் பெற்று மகிழலாம்.
* வருமானமும், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்
* வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
* அரசாங்க ஆதரவு அதிகரிக்கும். பதவி மாற்றங்கள் மனதிற்கு மகிழ்வளிக்கும்
*விளைச்சல் அதிகரித்தாலும், செலவுகளும் கட்டுக்கடங்காமல் ஏற்படும்.
*எதையும் திட்டமிட்டு செயல்படவேண்டும். குழந்தைகளால் கூடுதல் செலவு ஏற்படலாம்.
* பெண்கள் பிறந்த வீட்டு பெருமைகளை காப்பாற்ற முயற்சிப்பர்
* மாணவர்களுக்கு கூடுதல் உழைப்பு தேவை

3, 12, 21, 30 C, G, l, S
*பொருளாதாரம் உயர்வுடன் காணப்படும். முயற்சியில் முழு பலன் கிடைக்கும்
*குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும்
*தேக ஆரோக்கியம், பெற்றோரின் நலம் சிறப்பாக இருக்கும்
*வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உயர்வுக்கு காரணமாக அமைந்திடும்.
* புதுத்திட்டங்கள் புகழையும், பெருமையையும் தரும். அரசு ஆதரவு உண்டு
*அதிகாரிகளின் நட்பு கிடைக்கும், பதவி உயர்வுகளும் உண்டு.
*அரசியல்வாதிகள் தொகுதி வளர்ச்சியில் கவனம் தேவை
* பெண்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்பு கிடைக்கும்
*மாணவர்கள் கல்வியில் சிறப்பு பெறுவர்.

4, 13, 22, 31 D, M, T
*இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வீர்கள்.
*பல வழியிலும் வருமானம் வந்து சேரும். சேமிப்பும் உயரும்.
*சுபநிகழ்ச்சி நடத்திட நேரம் கை கூடி வரும்.
*உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும்.
*தொழிலதிபர்கள் சாதுர்யமாக செயல்பட்டு லாபம் காண்பர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவரும் விதத்தில் செயல்படுவர்.
*பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர்.
*அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவால் முன்னேறுவர்.
*விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் காண்பர்.
*பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வர்
*மாணவர்கள் போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.

5, 14, 23 E, H, N, X
*புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
*பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும்.
*குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த யோகம் உண்டாகும்.
*பெற்றோர் நலனில் அக்கறை காட்டி வருவீர்கள்.
*தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம் வருமானம் காண்பர்.
*வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட ஆதாயம் அதிகரிக்கும்.
*பணியாளர்கள் விரும்பிய பணி, இட மாற்றம் கிடைக்கப் பெறுவர்.
*அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.
*விவசாயிகள் நவீன கருவி மூலம் பணியை மேம்படுத்துவர்.
*பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலை நாட்டுவர்.
*மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

6, 15, 24 U, V, W
*பிறர் தயவின்றி நிற்காமல் சொந்தக்காலில் நிற்பீர்கள்.
*வருமானம் ஏறுமுகத்தில் இருக்கும். சேமிப்பு கூடும்.
*சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்.
*உடற்பயிற்சியால் உடல்நிலை சீராகும்.
*தொழிலதிபர்கள் தொழிலாளர் ஆதரவுடன் வளர்ச்சி காண்பர்.
*வியாபாரிகள் சகவியாபாரிகளின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
*பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.
*அரசியல்வாதிகள் தொண்டர் நலனுக்காகப் பாடுபடுவர்.
*விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துவர்.
*பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.
*மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படிப்பர்.

7, 16, 25 O, Z
*பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
*வருமானம் திருப்தியளிக்கும். தேவை நிறைவேறும்.
*சுபவிஷயத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
*ஆரோக்கியம் மேம்படும். கடமையில் ஆர்வம் கூடும்.
*தொழிலதிபர்கள் புதிய தொழில் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
*வியாபாரிகள் விரிவாக்க முயற்சியில் வெற்றி பெறுவர்.
*பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர்.
*அரசியல்வாதிகள் தலைமையின் இணக்கத்திற்கு உரியவராவர்.
*விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும்.
*பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர்.
*மாணவர்கள் எளிதில் கற்று தேர்ச்சியடைவர்.

8, 17, 26 F, P
*மனதில் நேர்மை எண்ணம் அதிகரிக்கும்.
*வருமானம் உயரும். பழைய கடன்பாக்கி தீரும்.
*சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்.
*உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
*தொழிலதிபர்கள் தொழிலில் புதிய சாதனை படைப்பர்.
*வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர்.
*பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் பணியாற்றுவர்.
*அரசியல்வாதிகள் மக்கள்நலனில் அக்கறை கொள்வர்.
*விவசாயிகள் நிலப்பிரச்னையில் இருந்து விடுபடுவர்.
*பெண்களுக்கு சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும்.
*மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து சிறப்பர்.

9, 18, 27
*உழைப்பால் வாழ்வில் உயர்வுநிலை பெறுவீர்கள்.
*கையில் எப்போதும் பெரும் பணம் புழங்கும்.
*உறவினர் ஆதரவோடு சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
*உடல் நலத்தோடு மனநிலையும் சிறப்பாக இருக்கும்.
*தொழிலதிபர்கள் அரசு வகையில் ஆதாய பலன் அடைவர்.
*பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர்.
*அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
*விவசாயிகள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவர்.
*பெண்கள் குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவர்.
*மாணவர்கள் படிப்பில் முன்னணி வகிப்பர்.

Advertisement
 
Advertisement