Advertisement

பிறந்த நாள் பலன்கள்

வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1,10,19,28
* வருமானம் சீராக இருக்கும். சிக்கனம் அவசியம்.
* உடல்நிலை புத்துணர்வு பெறும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள்.
* வியாபாரிகள் புதிய வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக்க முயற்சிப்பர்.
* விவசாயிகள் நிலப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பர்.
* பெண்கள் தாய்வீட்டு சீதனம் கிடைக்கப் பெறுவர்.
* மாணவர்கள் எதிர்கால கல்வி குறித்து திட்டமிடுவர்.


2,11,20,29
* அதிர்ஷ்டவசமாக புதிய வழியில் வருமானம் கிடைக்கும்.
* அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாக நேரிடும்.
* வியாபாரிகள் அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர்.
* விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துவர்.
* பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* மாணவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர்.


3,12,21,30
* வருமானம் சீராகும். கடன் பிரச்னை மறையும்.
* ஆரோக்கியம் மேம்படும். கடமையில் ஆர்வம் பிறக்கும்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவால் ஆதாயம் அடைவர்.
* விவசாயிகள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவர்.
* பெண்கள் குடும்ப வளர்ச்சிக்காக பாடுபடுவர்.
* மாணவர்கள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.


4,13,22,31
* வருமானம் திருப்தி தரும். வீட்டுத் தேவை நிறைவேறும்.
* உடல்நிலை ஒருநேரம் போல ஒருநேரம் இருக்காது.
* வியாபாரிகள் சக வியாபாரிகள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் காண்பர்.
* பெண்கள் தாய்வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவர்.
* மாணவர்கள் கல்வி வளர்ச்சி குறித்து சிந்திப்பர்.


5,14,23
* வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். சேமிப்பு கூடும்.
* பெற்றோர் உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
* வியாபாரிகள் சாமர்த்தியத்தால் வாடிக்கையாளரை கவர்ந்திழுப்பர்.
* விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கப் பெறுவர்.
* பெண்கள் மனம் போல ஆடம்பர பொருள் வாங்குவர்.
* மாணவர்கள் பெற்றோர் மகிழும் விதத்தில் படிப்பர்.

6,15,24
* வருமானத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.
* உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும்.
* வியாபாரிகள் புதிய உத்தி மூலம் லாபத்தை பெருக்குவர்.
* விவசாயிகள் புதிதாக நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* பெண்கள் கணவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்.
* மாணவர்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பர்.


7,16,25
* வருமானம் படிப்படியாக உயரும். கடன் பிரச்னை தீரும்
* உடல்நிலை போலவே மனதிலும் மகிழ்ச்சி நிலவும்.
* வியாபாரிகள் விரிவாக்க முயற்சியில் கவனம் செலுத்துவர்.
* விவசாயிகள் நல்ல மகசூலும் அதற்கேற்ப லாபமும் காண்பர்.
* பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.
* மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையப் பெறுவர்.


8,17, 26
* வருமானம் திருப்தியளிக்கும். தேவை நிறைவேறும்.
* உடல்நலனில் அக்கறை செலுத்த தொடங்குவீர்கள்.
* வியாபாரிகள் அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை பெறுவர்.
* விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற்று மகிழ்வர்.
* பெண்கள் ஆடை, ஆபரணம் மனம் போல வாங்குவர்.
* மாணவர்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்குவர்.


9,18,27
* கையில் பணம் புழங்கும். ஆடம்பரச் செலவும் கூடும்.
* உடல், மனம் இரண்டும் புத்துணர்வுடன் இருக்கும்.
* வியாபாரிகள் முதலீட்டை அதிகப்படுத்தி வருமானத்தைப் பெருக்குவர்.
* விவசாயிகள் திட்டமிட்டபடி நவீன கருவிகள் வாங்குவர்.
* பெண்கள் குடும்ப வளர்ச்சிக்காக ஆர்வமுடன் பாடுபடுவர்.
* மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் ஈடுபடுவர்.


Advertisement
 
Advertisement