Advertisement

பிறந்த நாள் பலன்கள்

பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
* உதவும் எண்ணம் கொண்டவராக திகழ்வீர்கள்.
* வருமானம் சீராகும். ஆடம்பர எண்ணம் உருவாகும்.
* உடல், மனம் இரண்டிலும் புத்துணர்வு மேலோங்கும்.
* தொழிலதிபர்களுக்கு லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.
* வியாபாரிகள் புதிய கிளை தொடங்க முயற்சிப்பர்.
* பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர்.
* அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவால் முன்னேறுவர்.
* விவசாயிகளுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.
* பெண்கள் பிள்ளைகள் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வர்.
* மாணவர்கள் பெற்றோருக்கு பெருமை தேடித் தருவர்.

2, 11, 20, 29 B, K, R
* நேர்மையுடன் செயல்பட்டு புகழ் பெறுவீர்கள்.
* புதிய வழிகளில் வருமானம் வர வாய்ப்புண்டு.
* உறவினர்கள் ஆதரவுடன் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
* நோய் பறந்தோடும். மருத்துவச் செலவு குறையும்.
* தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம் வருமானம் காண்பர்.
* வியாபாரிகள் வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வர்.
* பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கண்டு மனம் மகிழ்வர்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அடைவர்.
* பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் விருப்பமுடன் பங்கேற்பர்.
* மாணவர்கள் அக்கறையுடன் படித்து தரத்தேர்ச்சி காண்பர்.

3, 12, 21, 30 C, G, L, S
* எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.
* வருமானம் திருப்தியளிக்கும். செலவில் சிக்கனம் தேவை.
* திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நல்ல முறையில் நடக்கும்.
* உடல்நலம் குறித்த அக்கறை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
* தொழிலதிபர்கள் தொழிலாளர் நலனில் கவனம் செலுத்துவர்.
* வியாபாரிகள் புதியஉத்தி மூலம் விற்பனையைப் பெருக்குவர்.
* பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை விரைவில் கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவராவர்.
* விவசாயிகள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரிக்கும்.
* பெண்கள் மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
* மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படிப்பர்.

4, 13, 22, 31 D, M, T
* சாமர்த்தியமாக செயல்பட்டு சாதனை புரிவீர்கள்.
* கை நிறைய பணம் புழங்கும். செலவும் அதிகரிக்கும்.
* உறவினர் ஆதரவுடன் சுபநிகழ்ச்சிகள் நிறைவேறும்.
* நீண்ட கால நோயின் பிடியிலிருந்து விடுபடுவீர்கள்.
* தொழிலதிபர்கள் பயணம் மேற்கொள்வர்.
* வியாபாரிகள் புதிய வாடிக்கையாளரை கவர முயற்சிப்பர்.
* பணியாளர்கள் விண்ணப்பித்த கடன் கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் தலைமையின் சொல்லுக்கு மதிப்பளிப்பர்.
* விவசாயிகள் விளைபொருளை கூடுதல் விலைக்கு விற்பர்.
* பெண்கள் குடும்பத்தினரின் அன்புக்குரியவராக திகழ்வர்.
* மாணவர்கள் பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.

5, 14, 23, E, H, N, X
* பொதுநலனில் அக்கறை மிக்கவராக திகழ்வீர்கள்.
* வருமானம் சுமார். சிக்கனம் பின்பற்றுவது நல்லது.
* சுபவிஷயத்தில் தடை ஏற்பட்டாலும் முடிவு நன்மையே.
* உடல்நலனில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
* தொழிலதிபர்கள் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண்பர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளர் கருத்துக்கு மதிப்பளிப்பர்.
* பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மதிப்பது நல்லது.
* அரசியல்வாதிகள் அரசியல் சூழலை சாதகமாக்க முயல்வர்.
* விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துவர்.
* பெண்கள் உறவினருடன் சுற்றுலா சென்று மகிழ்வர்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பர்.

6, 15, 24, U, V, W
* தொட்டது துலங்கும் பொன்னான காலகட்டம்.
* வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு பலமடங்கு உயரும்.
* சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும்.
* அலைச்சலால் அசதிக்கு ஆளாக நேரிடலாம்.
* தொழிலதிபர்கள் அனைவர் மத்தியிலும் செல்வாக்குடன் திகழ்வர்.
* வியாபாரிகள் கிளை துவங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்.
* அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.
* விவசாயிகள் நவீன கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர்.
* பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர்.
* மாணவர்கள் லட்சிய நோக்குடன் படித்து வருவர்.

7, 16, 25, O, Z
* திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
* சேமிக்கும் விதத்தில் வருமானம் அதிகரிக்கும்.
* திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.
* உடல் வலிமையோடு மனதிலும் துணிச்சல் அதிகரிக்கும்.
* தொழிலதிபர்கள் தொழிலாளர்களின் ஆதரவு கண்டு மகிழ்வர்.
* வியாபாரிகள் வாடிக்கையாளரை கவரும் விதத்தில் செயல்படுவர்.
* பணியாளர்கள் அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* அரசியல்வாதிகள் தலைமையின் கருத்திற்கு மதிப்பு கொடுப்பர்.
* விவசாயிகள் நிலப்பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பர்.
* பெண்களுக்கு தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
* மாணவர்கள் ஆர்வமுடன் படித்து முன்னணி வகிப்பர்.

8, 17, 26, F, P
* இனிய பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.
* வருமானம் உயரும். கடன் தொல்லை மறையும்.
* குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்திட நேரம் கூடி வரும்.
* உடல்நிலை சீராக இருக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும்.
* தொழிலதிபர்கள் தொழில்ரீதியான பயணம் வெற்றி பெறும்.
* வியாபாரிகள் முதலீட்டை அதிகப்படுத்தி லாபம் பெருக்குவர்.
* பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கண்டு மகிழ்வர்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு.
* விவசாயிகள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரிக்கும்.
* பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர்.

9, 18, 27
* திறமையுடன் செயல்பட்டு வாழ்வில் உயர்வீர்கள்.
* வருமானம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு கூடும்.
* மனம் போல மங்கள நிகழ்ச்சி நடந்தேறும்.
* உடல்நிலை நன்றாக இருக்கும்.
* தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் லாபமடைவர்.
* வியாபாரிகள் சக வியாபாரிகளின் மத்தியில் நற்பெயர் பெறுவர்.
* பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் தொண்டர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகளுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
* பெண்கள் தாராளமாக ஆடை, ஆபரணம் வாங்குவர்.
* மாணவர்கள் வளர்ச்சிக்கான சூழல் அமையப் பெறுவர்.

Advertisement
 
Outbrain
Advertisement