Advertisement

NRIஆல்பம்: தென் கிழக்கு ஆசியா

'தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம்' முன்னிட்டு இராணுவம் மற்றும் மாணவர்கள் மட்டிகளி பகுதியையையும் திருகோணமலை பிரதேச சபை ஊழியர்களும் உறுப்பினர்களும் அலஸ் தோட்ட கடற்கரை பகுதியையும் துப்புரவு செய்தனர்.
மாலத்தீவு தலைநகர் மாலேயில், இந்திய தூதரகத்தின் இந்திய கலாச்சார மையத்தில் இந்தி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியாவின் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தி கவிதைகளைப் படித்தனர்; இந்தியில் உரை நிகழ்த்தினர்
தற்கொலைகளை தடுக்கும் வகையில் இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடத்தி வரும் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் வரவேற்றனர்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் ஞானகுணாளனும் திருகோணமலை பிறிமா இலங்கை தனியார் நிறுவன மாவடட மேலாளர் ஸ்டீவன், உதவி மேலாளர் லெப்டினென்ட் கர்னல் கித்சிறி மணியங்கமாவும் சந்தித்தனர்.
மாலத்தீவின் தலைநகரான மாலே நகரில் இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, இந்திய கலாச்சார மையத்தில் நடைபெற்ற தியாகிகள் புகைப்பட கண்காட்சியை இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ரா திறந்து வைத்தார்
இந்து மகா சமுத்திரத்தில் உள்ள மாலத்தீவுகளின் தலைநகர் மாலேயில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிராமிய நடனங்கள் இடம் பெற்றன.
மலேஷியாவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டியில் அதிக மழலைகள் மகா கவி சுப்ரமண்ய பாரதியார் வேடமணிந்து கலந்துகொண்டனர்.
மலேஷியா வாழ் தமிழர் (இந்திய குடியுரிமை) சங்கம் சார்பில் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, பேச்சு போட்டி, மாறுவேட போட்டி நடைபெற்றது
மலேஷியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கம் சார்பில் இந்திய தமிழ் பெண்கள் பங்குகொண்ட இந்திய உணவு திருவிழா கோலாலம்பூரில் பிரிக்பீல்ட்ஸ் பகுதில் அமைந்துள்ள பைன்ஸ் கோண்டோமினியம் கிளப் ஹவுஸ் ஹாலில் நடைபெற்றது.
மலேஷியா தலைநகர் கோலாலம்பூர், இந்திய ஹவுஸ் -ல் இந்தியா சுதந்திரதின கொண்டாட்டம் நடைபெற்றது. 72- வது சுதந்திரதின விழா இந்திய தூதர் மிரிதுல் குமார் தலைமையில் மலேசியாவில் கொண்டாடப்பட்டது.
 
Advertisement