Advertisement

NRIஆல்பம்: வளைகுடா

ரஜினிகாந்த் நடித்த மிகபிரம்மாண்டமான 2.0 திரைப்படம் கத்தாரின் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் கத்தாரில் மட்டும்140 காட்சிகள் திரையிடப்பட்டு, இதுவரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது 2.0, என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் ரஜினி மக்கள் மன்றம் நான்கு சிறப்பு ரசிகர் காட்சிகளை வெவ்வேறு காட்சியகங்களில் ஏற்பாடு செய்திருந்தனர்.
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்பட சிறப்பு காட்சிக்கு பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. பஹ்ரைன் முக்தா சினிமாஸ் அரங்கில் 6 திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ரஜினியின் புகைப்படம் பொறித்த டி-சர்ட்கள், பஹ்ரைன் ரஜினி மக்கள் மன்றம் பெயர் பொறித்த டிக்கெட்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் நடிகர் “ஒரு தலை ராகம்” ரவீந்திரன் கேக் வெட்டி தொடங்கி வைத்தார்.
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க வளர்ச்சித்துறை செயலாளர் பஞ்சு இராஜ்குமார் மற்றும் வேலை வாய்ப்புத்துறை துணை செயலாளர் பிரதீப் ஆகியோர் நேரடியாக களத்திற்கு சென்று உள்ளூர் மக்கள் உதவியுடன் இன்று வரை நிவாரண பொருள்கள் கிடைக்காத, பொருள்கள் சென்று சேராத கிராமங்களுக்கு சிறிய வண்டிகள் மூலம் விநியோகம் செய்தனர்.
அபுதாபியில் செயல்பட்டு வரும் மெளலிது கமிட்டி சார்பில் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கில் மீலாது பெருவிழா நடைபெற்றது.
ஓமன் நாட்டின் ஒரு பகுதி சலாலா ஆகும். இந்த பகுதியானது ஏமன் நாட்டின் எல்லையின் அருகில் உள்ள முக்கிய ஊர் ஆகும். இந்த பகுதிக்கு இந்திய தூதர் முனு மஹவர் சென்றார். அவர் அங்கு இந்திய சமூக நல மைய பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
ஷார்ஜா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருச்சி சாதிக் அலி தலைமை வகித்தார். நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முஹமதலி வெளியிட சாதிக் அலி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜாவித் கலந்து கொண்டனர்.
துபாய் ஈமான் கல்சுரல் செண்டருக்கு சிறப்பு சேவைக்கான விருதினை துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் ஹுதா அல் புஸ்தகி, சம்மா அல் அக்பாபி ஆகியோர், ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கானிடம் வழங்கினர். பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு முதுவை ஹிதாயத், ஆடிட்டர் நாகூர் ரவூப் உடன் இருந்தனர்
குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் 151-ம் மாதாந்திர சிறப்புக் கூட்டமானது 'தீபாவளித் திருநாள்' மற்றும் குழந்தைகள் நாள் கொண்டாட்டங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்விற்கு மன்றத்தின் காப்பாளர் கவிஞர் உ.கு.சிவகுமார் அவைத்தலைமையேற்க, ஆரூர் வாசு ராமநாதன் முன்னிலை வகித்தார்.
துபாயில் உள்ள புனித தாமஸ் ஆர்த்தோடக்ஸ் கதீட்ரல் தேவாலயத்தில் அறுவடைத் திருவிழா மற்றும் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அருட்தந்தை நினன் பிளிப், அமீரகப் பிரமுகர் அப்துல்லா அல் சுவைதி, தும்பே குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் தும்பே முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
ராசல்கைமாவில் என்.எம்.சி. ஹெல்த்கேர் நிறுவனத்தின் சார்பில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடையோட்டம் நடந்தது. இதில் எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
 

Download for free from the Store »

Advertisement