Load Image
Advertisement

NRIஆல்பம்

14 Feb 2024

பாரீசுக்கு அருகிலுள்ள மலகோப் நகரத்தில் நடைபெற்ற பிரான்சு தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் மலகோப் நகர துணை மேயர் கேத்தரீன் மோரீஸ், பிரான்சிலுள்ள இந்திய தூதரக முதன்மை அதிகாரி கே.ஜி.பிரவீன் குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

02 Jan 2024

பிரான்ஸ் கிரிஞி சனாதான தர்ம பக்த சபையின் சார்பாக ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை 0101.2024 திங்கட்கிழமை காலை 10 மணியிலிருந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பஜனைக் குழுவினரின் திருப்பாவை, .திருவெம்பாவை பாடல்களுடன் இரவு 9 மணி வரை சிறப்பாக நடைபெற்றது

24 Dec 2023

பிரான்ஸ் சாவிக்னி கோயிலில் வைகுண்ட ஏகாதேசி அன்று லட்சுமி நாராயணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. தியாகராஜன் துளசி தேவி குடும்பத்தினர் திருப்பாவை படித்து,பல்லாண்டு பாடினர். சிறுமி சம்யுக்தா பரதநாட்டியம் அனைவரையும் கவர்ந்தது

15 Dec 2023

திருக்குறளை ஐரிஷ் மொழியாக்கம் செய்த கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக், திருக்குறள் ஐரிஷ் நூலை டிரினிட்டி மொழித்துறைப் பேராசிரியர் மைக்கேல் குரோனின் முன்னிலையில் வழங்க, அயர்லாந்து இந்தியத் தூதரக முதன்மைச் செயலர் முருகராஜ் தாமோதரன் பெற்று வெளியிட்டார்

12 Dec 2023

பிரான்சில் முதன்முறையாக செர்ஜி நகரிலுள்ள பிரான்சுவா மித்ரான் பூங்காவில் திருவள்ளுவர் முழு உருவச் சிலையை புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்து வைக்க, செர்ஜி மாநகர தலைவர் ழான் போல் ழாந்தாம், பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப், புதுவை சிற்பி முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்

25 Nov 2023

மூன்று வயது சிறுவன் பா. இனியவேல், ஜெர்மனியின் பிராங்ஃபர்ட் நகரில் கார்னிவல் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் இந்திய தலைவர்கள் மாதிரி வேடம் அணிந்து அவர்களைப்போன்று பேசி அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்

21 Sep 2023

பிரான்ஸ் சனாதனதர்ம பக்தசபை கிரிஞி சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது

21 Aug 2023

வடஜெர்மனியின் பிரேமன் நகரில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய ஆண்டு மஹோத்சவ விஞ்ஞாபனத்தின் பத்தாம்நாள் ஐநூற்றுக்கும் மேற்பட்ட அடியவர்கள் தேர் இழுத்து, அக்னிச்சட்டி, பாற்குடம் எடுத்து விநாயகரை வழிபட்டனர். ( படம்: தினமலர் வாசகர் பாலகிருஷ்ணன்)

30 Jun 2023

வடஜெர்மனியில் உள்ள பிறேமன் நகரில் வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் ஐந்து நாட்கள் யாக சாலை பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் ஐந்நூறு பேர் கலந்து கொண்டு விநாயகர் அருளை பெற்றனர் . (படம்- தினமலர் வாசகர் பாலகிருஷ்ணன்)

15 Jun 2023

ஜெர்மனி வுப்பர்டல் நகரில் அமைந்துள்ள தனித்துவமான மோனோரயில். இது ஒரு தொங்கும் இரயில். பெரிய எஃகு தூண்களால் கட்டப்பட்ட தண்டவாளங்களுக்குக் கீழே இந்த இரயில்கள் பற்சக்கரங்களால் பற்றிக்கொண்டு தலைகீழாக தொங்கியவண்ணம் செல்கின்றன

 
Advertisement