Advertisement

NRIஆல்பம்: ஆஸ்திரேலியா

சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஆக்லாந்தின் எல்லெர்ஸ்லி பகுதியில் நடந்தது. இறுதியாக வந்த வண்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா பெரிய பை நிறைய இனிப்பு மிட்டாய்களை சாலையின் இரு ஓரமும் நின்று கொண்டிருக்கும் குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்கினார்.
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில், ஆஸ்திரேலிய தமிழ் கலாச்சார சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டமும், சென்னை தமிழ் பள்ளி ஆண்டு விழாவும், கான்பெர்ரா மெல்ரொஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நியூசிலாந்து கர்னாட்டிக் சொசைட்டி சார்பில் ஆக்லாந்து ப்க்ளிங் சென்டரில், மறைந்த கர்நாடக இசை கலைஞர் சுப்பிரமணியத்தின் பேரனும் ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான அசோக் ராமரத்தினத்தின் கச்சேரி நடைபெற்றது. அவரோடு அசோக் மல்லூர்- வயலின், ராஜ் நிவாஸ்- மிருதங்கம் வாசித்தனர்.
ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் மிகச் சிறப்பாகக் கொண்டாடிய தீபாவளி விழாவில் சிறப்பு விருந்தினர் சின்னி ஜெயந்தின் மிமிக்ரி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. திரைப்பட பின்னணி பாடகரான யுகேந்திரன் ரசிகர்களின் விருப்பங்களை கேட்டு பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்
மெல்போர்ன் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் ஏறக்குறைய முன்னூறு பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கமல்ஹாசன் படப்பாடல்கள் இசைக்கப்பட்டன.
சிட்னி “தமிழ் வளர்ச்சி மன்றம்” சார்பாக இந்த ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு தமிழ்த்தாய் விருது வழங்க எடுத்த முடிவின் படி இந்த ஆண்டின் விருது மருத்துவர் மனோ மோகனுக்கு வழங்கப்பட்டது. விருதினை, மனோ மோகனுக்கு, மாநில ஸ்ட்ரெத் பீல்ட் பாராளுமன்ற உறுப்பினர் ஜோடி மக்கே வழங்கி பாராட்டினார்.
ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யாவின் உபன்யாசம் ராகவாச்சாரி இல்லத்தில் நடைபெற்றது. ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் 649 வைத்து ஐப்பசி திருமூல நட்சத்திரத்தை ஒட்டி அவருடைய சிறப்புகளையும் பணிகளையும் பாண்டுரங்கன் எடுத்து கூறினார்
ஆக்லாந்தில் பாண்டுரங்கன் பட்டாச்சார்யா உபன்யாசம்
பிரிஸ்பேனிலிருந்து இயங்கி வரும் லலிதகலாலயா நாட்டியப்பள்ளியின் பத்து மாணவியர்களின் சலங்கை பூஜை சமீபத்தில் ஆஃகாசியா ரிட்ஜ் அரசுப்பள்ளி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆஸ்திரேலியா, மெல்போர்ன், கர்ரம் டவுண்ஸ், ஸ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் தீபாவளி கொண்டாட்டம்
 

Download for free from the Store »

Advertisement