Advertisement

தமிழகம்: 13-மார்ச்-2018

போடி சிபி ஏ கல்லூரி எதிரே ராணுவ ஹெலிகப்ட்டர் தரை இறக்கப்பட்டது. மீட்பு பணிக்கு தயாரான விமான படையினர் .
தேனி மாவட்டம் குரங்கணி வன பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் யாரும் சிக்கியுள்ளனரா என தேடும் அதிரடிப்படை வீரர்கள்.
பலத்த காற்றால் பழநி முருகன் கோயில் ரோப்கார் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஹெல்மெட் சோதனையின் போது, ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை விடுவிக்க கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணியாமல் டூ வீலர்களில் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வாய் பேச முடியாதவர்கள் மற்றும் காது கேளாதவர்கள் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூரில் கள்ளசாராயம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
 
Advertisement