Advertisement

தமிழகம்: 07-மார்ச்-2018

சென்னை கொரட்டூர் பக்தவச்சலம் கல்லூரி மாணவிகள் கொரட்டூர் ஏரியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர்.
கோவை நவ இந்தியாவில் ராமகிருஷ்ணா கல்லூரியில் கேட்ரிங் துறை மாணவர்கள் முட்டையில் 100 வகையான உணவுகளை தயாரித்து அசத்தினர்.
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது .
பழநி இடும்பன்குளத்தில் அழகாய் பூத்துள்ள அல்லிப்பூக்கள்.
மழையில்லாததால் நீர்மட்டம் குறைந்து வரும் உடுமலை அமராவதி அணை.
திருப்பூர், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலையில் ரேசன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
கோவை கொடிசியாவில் நடந்து வரும் இந்திய ராணுவ தளவாட உதிரிபாக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ரேடார் கண்காணிக்கும் கருவி.
கோவை நவ இந்தியா ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து விழிப்புணர்வு பேரணி மகளிர் பால்டெக்னிக்கில் இருந்து துவக்கியது.
முதல்வர் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள்.
ஆதவன் எப்போது நம்மை பார்த்தாலும் வாழ்க்கை இன்னும் அழகு, சுவாசத்தால் வானத்தில் என்றுமே மூச்சு காற்று புத்துயிர் பெற்றுள்ளது. இடம்: கோவை சிங்காநல்லூர்.
 
Advertisement