Advertisement

தமிழகம்: 05-மார்ச்-2018

கர்நாடகாவில் யானை தாக்கி உயிரிழந்த வனத்துறை அதிகாரி மணிகண்டன் உடலுக்கு இறுதி மரியாதை செய்த தேனி கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
அய்யா வைகுண்டர் அவதரித்த நாளையடுத்து சென்னை, வண்ணாரப்பேட்டையிலிருந்து, மணலி புதுநகர் வைகுண்ட அய்யா கோவிலுக்கு அலங்கார ரதத்தில், பக்தர்களின் உற்சாகத்துடன் ஊர்வலமாய் சென்ற வைகுண்டர். இடம்- திருவொற்றியூர், நெடுஞ்சாலை.
கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நூட்ப கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி நடந்தது.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் அருகே அரியனேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தள்ளுவண்டியில் தண்ணீர் எடுத்து செல்லும் மக்கள்.
 
Advertisement