Advertisement

தமிழகம்: 15-பிப்-2018

கோவை நவ இந்தியாவில் இந்துஸ்தான் கல்லூரியில் ‛ஹிலாரிகஸ்-2018' கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துள்ளும் நடனம், மயக்கும் பாடல்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.
காதலர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இளைஞர்கள் பலூன் பறக்க விட்டும் கேக் வெட்டியும் கொண்டாடினர்.
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பின் சார்பில் நடந்த பேரணியில், வாகன ஓட்டிகளிடம் ஒலி மாசு தவிர்க்க வலியுருத்தி, பதாகைகளை ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவியர்... இடம் : கோயம்பேடு, சென்னை.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்.
இந்திய விமானநிலையம் மற்றும் சென்னை மாநகராட்சி இடையே திடக்கழிவு மேலாண்மை கழிவுரமுற்றம் கட்டுமானத்திற்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பெண்கள். இடம்:திருவல்லிக்கேணி.
உத்தர பிரதேசத்தில் தொழில் தொடங்குவது குறித்து, அந்த மாநில முதன்மை செயலாளர் மிர்தஞ்சன்குமார் திருப்பூர் சைமா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பொள்ளாச்சி பாரதியார் பல்கலை உறுப்பு கல்லூரியில் வேலை வாய்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் நடந்த கல்வி ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே குந்தா கோத்தகிரியில் ,கோத்தர் பழங்குடியினர் ஆட்டபபுப் (நடன பண்டிகை) பண்டிகையில் தாங்கள் பாரம்பரிய நடனமாடினர்.
 
Advertisement