Advertisement

தமிழகம்: 07-டிச-2017

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீஆதிவராகநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.
சிறுபாக்கம் ஸ்டேட் பாங்க்கில் உலக மண் வள தினம் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லூரி மாணவர்களின் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர்க்கண்காட்சிக்காக முதற்கட்ட நாற்று நடவுப் பணிகளை மேற்கொண்ட பணியாளர்கள்.
தேனி அல்லிநகரம் அரசுமேல்நிலைப்பள்ள நூலகத்தில் தினமலர் மற்றும் பட்டம் இணைப்பை விரும்பிப் படித்த மாணவர்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக, ஆயிரங்கால் மண்டபம் எதிரே பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையிலிருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
 
Advertisement