Advertisement

தமிழகம்: 09-அக்-2017

கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் ஜப்பான் ஷிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான ஓப்பன் கராத்தே போட்டி நடந்தது.
மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி ஏரியில் தண்ணீர் நிரம்பி, மதகு வழியாக வழிந்தோடியது.
சின்னமனூர் முத்துலாபுரம் ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் வகையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள பாறாங்கற்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ்கள் நிற்கவேண்டிய இடத்தில் பைக்குகள் ஆக்கிரமித்துள்ளன.
ராமநாதபுரம் வள்ளல் சீதக்காதி உள்விளையாட்டு அரங்கில் பளு தூக்கும் போட்டி நடந்தது.
தமிழக ஆந்திர எல்லையில் பெய்த தொடர்மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேலூர் அருகே செண்பாக்கம் பகுதியில் பாலாற்று வெள்ளத்தில் இறங்கி விளையாடிய சிறுவர்கள் மற்றும் மக்கள்.
தீபாவளியை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க வடசென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்.சி சாலையில் குவிந்த மக்கள்.
 
Advertisement