Advertisement

தமிழகம்: 13-செப்-2017

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இறைபணியில் டங்கா மாடு (இடது) ஒய்வு பெற்றதை தொடர்ந்து புதிதாக பணியில் ஈடுபடவுள்ள தார்பாக்கர் காளையை முத்தமிட்டு வரவேற்றது.
கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் ஒண்டிபுதூரை அடுத்த பட்டணம்புதூர் நொய்யல் தடுப்பணையில் நீர் நிறைந்து வழியத்துடங்கியுள்ளது
வித விதமாய்..! நவராத்திரி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி திண்டுக்கல் காந்தி கிராம கதர் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விதவிதமான கொலு பொம்மைகள்.
ஆரம்புச்சுட்டோம்ல...! விவசாய துறையில் நவீன எந்திரங்கள் வந்தாலும், மாடுகள் பூட்டி உழுது, மக்காச்சோளம் விதைக்கும் விவசாயிகள். இடம்: பழநி அருகே கணக்கன்பட்டி. திண்டுக்கல்.
காத்திருக்குதோ...! கருமேக கூட்டம் மழை பெய்ய காத்திருக்கிறதோ ? இடம்: திண்டுக்கல் சின்னாளப்பட்டி.
பூத்து குலுங்கும் பூக்கள் . புதுச்சேரி -திண்டிவனம் நான்கு வழி சாலையில் தற்போது பெய்து வரும் மழையால் பூத்து குலுங்கும் பூக்கள்
 
Advertisement