Advertisement

தமிழகம்: 13-ஆக-2017

கடலுாரில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா முன்னேற்பாடு குறித்து அமைச்சர் சம்பத், விழா நடைபெறவுள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தை பார்வையிட்டு ஐ.ஜி., ஸ்ரீதர், டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன், எஸ்.பி., விஜயகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக் கிழமையில் நாடு நலம் பெற வேண்டி 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் வழிபாடு செய்தனர்.
மதுரையில் பகலில் வாட்டிய வெயிலின் தாக்கத்தை குறைக்க மாலையில் கொட்டிய மழை
திண்டுக்கல்லில் நடந்த மாநில ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி மதுரை அணிகள் மோதின
சுதந்திர தினத்தையொட்டி நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் திண்டுக்கல் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்
சுதந்திரதினத்தையொட்டி நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர போலீசார் இடம்: சென்னை காமராஜர் சாலை
சென்னை ஐ.சி.எப்.பில் உள்ள ரயில்வே அருங்காட்சியகத்தில் கலை மற்றும் சிற்பம் தொடர்பான முகாம் நேற்று நடந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாதிரி ரயிலுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட மாணவியர்.
 
Advertisement