Advertisement

தமிழகம்: 05-ஆக-2017

பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் நேற்று நடந்த பிரம்மோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விருதுநகரில் பள்ளி ஒன்றில் மழைவளம் காக்க வேண்டி நடந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.
ஆடிப் பெருக்கை முன்னிட்டு தேனியில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை களைகட்டியது.
குற்றாலம் அருவியில் தண்ணீர் சற்று அதிகம் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் மீன் இறக்கு தளத்தில் ஆர்ப்பரித்து எழுந்த கடல் அலைகளை செல்பி எடுத்த சுற்றுலா பயணிகள்.
சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டம் குருந்தாருடைய அய்யனார், விளக்காருடைய அய்யனார் கோவிலில் 11 ஆண்டுகளுக்கு பின் நடந்த புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
Advertisement