Advertisement

தமிழகம்: 03-ஆக-2017

கடலுாரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடைபெறுவதை யொட்டி பெரியார் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்களுக்காக நடந்த போட்டிகளை கலெக்டர் ராஜேஷ் பார்வையிட்டார்.
பண்ருட்டி ஐயனார் கோவில் பாட்டை தெருவில் வரும் குடிநீர் கலங்கலாக வருவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் நடந்த வல்வில் ஓரி விழாவில் தாவரவியல் பூங்காவில் செல்பி எடுத்துக் கொண்ட மாணவர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக் கோவிலில் இரண்டாவது வின்ச் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. படத்தில் காணப்படும் தாயில்லாத இந்த குழந்தைக்கு இன்னொரு தாயின் பால் வழங்கப்பட்டது. இடம்: கோவை அரசு மருத்துவமனை
 
Advertisement