Advertisement

தமிழகம்: 13-ஜூலை-2017

வேதனை தரும் சுமை...! திண்டுக்கல்லில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் குட்டத்துப்பட்டியில் தண்ணீர் பிடிக்க காலி குடங்களுடன் சுமந்து செல்லும் பெண்.
பாம்பு பார்க்கலாமா..! பழநி அரசு அருங்காட்சியகத்தில் பாம்புகள் தின புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டகல்லூரி மாணவிகள்.
நல்லா விளைஞ்சுருக்கே...! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி கேழ்வரகு பயிரிடப்பட்டுள்ளது.
ஏமாற்றிடுச்சே...! ராமநாதபுரத்தில் மழை பெய்து பல மாதங்களாகிவிட்ட நிலையில் நேற்று மாலை கருகருவென திரண்ட மேகத்தினால் மழை பொழியாமல் ஏமாற்றியது.
குறி தப்பாது...! சென்னை ரைபில் கிளப் சார்பில் மாநில அளவிலான 43வது துப்பாக்கி சுடும் போட்டி ஆவடி அருகே வீராபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட வீராங்கனை
என்னதான் நடக்குது பார்கனும்...சட்டசபைக்குள் நம்ம மக்கள் பிரதிநிதிகளின் விவாதங்களைக்காண குன்றத்தூர், லிட்டில் பிளவர் பள்ளியிலிருந்து ஆர்வத்துடன் வந்த மாணவ, மாணவியர்கள்.
 
Advertisement