Advertisement

தமிழகம்: 10-ஜூலை-2017

வால்பாறையில் சில நாட்களாக தென்மேற்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கடந்த மாதத்தில் வறட்சியில் காய்ந்து இருந்த தேயிலைச் செடிகள் மீண்டும் துளிர் விட்டுள்ளன; பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே கணக்கன்பட்டி பகுதியில் பூத்துள்ள காகிதப் பூக்கள்.
திண்டுக்கல்லில் பகலில் கார்மேகம் சூழ்ந்து இருட்டியது.
வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் வந்த நீரில் குளித்து மகிழந்த மக்கள்.
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குள் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் பசுமையான மரங்கள்.
சிவகங்கை அருகே பிள்ளைவயல் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த மஞ்சுவிரட்டில் காளையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்.
ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்தில் கண்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள அக்னி ஏவுகணையின் மாதிரி.
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சிவச்சாரியர்கள் நேற்று பிரம்ம குளத்தில் அமர்ந்து வருணஜெபம் நடத்தினர்.
 
Advertisement