Advertisement

தமிழகம்: 06-ஜூலை-2017

நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ள மாங்காய் பிளமஸ்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் -ஊட்டி சாலையோரம் வளர்ந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த யூகலிப்டஸ் மரங்கள்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி விதிப்பிற்கு எதிராக சாத்தூரில் இயந்திர தீப்பட்டி தயாரிப்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிணற்று நீரும் வற்றியதால் கருகும் கரும்பு பயிர்கள் இடம்: மதுரை மாவட்டம் கொண்டையம்பட்டி
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் வாழைமரத்திற்கு வாடல் நோயை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ.வியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் டிராக்டர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வளம் குறைந்ததால் கரையில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டுப்படகுகள் இடம்: தேவிப்பட்டிணம்.
அடுத்த மாதம் 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிருஷ்ணகிரியில் பிரமாண்ட விநாயகர் சிலை ஒன்றிற்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.
 
Advertisement