Advertisement

தமிழகம்: 15-ஜூன்-2017

இயற்கை தந்த கொடையான நுங்கு விற்பணை இன்னும் சில தினங்கள் மட்டுமே.பிறகு அடுத்தாண்டுதான் மறுபடி பார்க்க முடியுமாம்.இடம்.மதுரை அரசரடி ரோடு.
சீசனையொட்டி பலா மரத்தில் காய்த்து தொங்கும் பலாப்பழங்கள். இடம் .உடுமலை பள்ளிபாளையம்.
தாண்டிக்குடி பகுதியில் விளைந்த மலை வாழைக்காய் பொதிகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தில் பயிரிடப்பட்டுள்ள சோளப்பயிர்
சிவகங்கையில் நேற்று மாலை மழை பெய்த போது வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருளில் மூழ்கியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன இடம்:சிவகங்கை ரயி்ல்வே மேம்பாலம்.
தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் கடலில் உற்சாகமாக விளையாடும் சுற்றுலா பயணிகள்.
எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் சுவாமி.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தொடுதிரை மூலம் பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியை.
ெஹல்ப் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் உலக முதியோர் அவமதிப்பு எதிர்ப்பு விழிப்புணர்வு நாளான நேற்று முதியோர்களை அவமதிக்க மாட்டோம் என்று செவிலியர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இடம்: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சென்னை.
 
Advertisement