Advertisement

போட்டூன்: 02-ஆக-2017

எங்கெங்கும் டெங்கு : கொசுவினால் பரவும் டெங்கு நோய் அதிகம் பரவுதை தடுக்க பொது இடங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட நிலவேம்பு. கஷாயம்.
முடியல மிஸ்டர் சூரியன்... : மே மாதத்தோடு உஷ்ணத்திற்கு ஓய்வு கொடுக்கவேண்டிய சூரியன், ஜூன் போய் ஜூலையும் முடியப்போகிறது இன்னும் அக்னி நட்சத்திர வெயில் போல உஷ்ணத்தைக் கொடுத்து கொண்டிருந்தால் மக்கள் எப்படித்தான் தாங்குவார்கள்.சென்னை அரசு விழாவிற்கு வந்த பொதுமக்கள் வெயில் தாங்காமல் தவித்தனர்.
கருத்து சொல்ல வாங்க.. : மின் கட்டணம் மாற்றி அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை சென்னையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்திற்கு நிறைய பேர் வராததால், அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது.படம்:சீனிவாசன்
இதுதான் நாட்டு மாடு... : திருச்சி மக்கள் மன்றத்தின் சார்பில் நடந்த விதை திருவிழாவில் நாட்டு மாடுகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு இருந்த நாட்டு மாடுகளை இப்படி கண்காட்சியில் பார்க்கும் நிலை வந்துவிட்டதே என பலர் வேதனைப்பட்டனர்.
சிறையா?வீடா? : பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா பற்றி வெளியாகியுள்ள வீடியோவில் சிறைக்கைதிகளுக்கு உரிய சீருடை அணியாமல் சசிகலா சுடிதாருடனும், இளவரசி சேலையுடனும் இருக்கின்றனர். வீடியோ காட்சிகளை பார்த்தால் இவர்கள் சிறையில் தண்டனை அனுபவிப்பது போல தெரியவில்லையே?
மழையாரே வருக. : சென்னை மக்களின் பொழுது போக்கே தண்ணீர் லாரிக்காக காத்திருப்பது என்று சொல்லும் வகையில் தண்ணீர் பிரச்னை கடுமையாகியிருக்கிறது.இந்த நிலையில் இப்போதுதான் மழை எட்டிப்பார்க்கிறது.எட்டிப்பார்க்கும் மழை கொட்டித்தீர்க்கட்டும், ஏரி குளங்கள் எல்லாம் நிரம்பட்டும், குடிநீர் பிரச்னை தீரட்டும்.
நாட்டு மக்கள் என்னாவார்கள்? : வரி விதிப்பை கண்டித்து சினிமா தியேட்டர்கள் இன்று மூடப்பட்டுள்ளன . திடுதிப்பென்று இப்படி செய்தால் இந்த நாட்டு மக்கள் என்னாவார்கள், குறிப்பாக இளைஞர்கள் சினிமா பார்க்காமல் திகைத்து போய்விட மாட்டார்களா?
இது தேவைதானா? : ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் நோயாளிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சத்தம் எழுப்பாமல் செல்ல வேண்டும் என்பார்கள் இந்த நிலையில் சென்னை ஒமந்துாரர் அரசு ஆஸ்பத்திரி விழாவில் கலந்து கொள்ள வந்த முதல் அமைச்சரை வரவேற்கும் விதத்தில் சென்டைமேளம் முழங்க வரவேற்றனர் அடிச்ச அடியில் உள்ளே இருந்த நோயாளிகள் என்ன ஆனார்களோ? குறிப்பாக இதய நோயாளிகள்...
பார்த்து எவ்வளவு நாளாச்சு... : ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதை பார்த்து எவ்வளவு நாளாச்சு.மழை காரணமாக வால்பாறை நடுமலை ஆற்றில் நீர் கரை புரண்டு ஒடுகிறது.தண்ணீர் இல்லாத சிரமத்தை ரொம்பவே அனுபவித்துவிட்டோம் ஆகவே இப்போதாவது இயற்கை தரும் இந்த நீரை சேமித்து நல்லபடியாக பயன்படுத்த கற்றுக்கொள்வோம்.
தண்ணீர் பிடிக்க போகலாம் வாங்க... : போதுமான மழை இல்லாததால் குடிநீரை தேடி அலைவது எல்லா ஊர்களிலும் தொடர்கதையாகவே இருக்கிறது, சென்னை அனகபுத்துார் பகுதியில் குடும்பம் குடும்பமாக தண்ணீர் தேடி செல்கின்றனர்.
சி.டி.,ஒண்ணு வச்சிருக்கேன்... : நடந்துவரும் சட்டசபை கூட்டத்திற்கு வருகைதந்த மு.க.ஸ்டாலின்.,கூவத்துாரில் எம்எல்ஏக்களை பேரம் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என்று சி.டி.,ஒன்றை காட்டியபடி வந்தார்.
ஜெயக்குமார் வந்துட்டாரு... : சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அமைச்சர்களில் ஜெயக்குமாருக்குதான், அதிக வரவேற்பும் அதிக எதிர்பார்ப்பும் இருந்தது.படம்:சுரேஷ் கண்ணன்.
முதல்வர் போட்டோ மாட்டியாச்சு... : எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று நுாறு நாட்களான நிலையில் சரி அவரது படத்தை அமைச்சர்கள் மற்றும் அரசு அ லுவலகங்களில் மாட்டலாம் என முடிவு செய்து படத்தை மாட்டிவருகின்றனர்.
லஞ்ச எஸ்.ஐ : அரசாங்கம் எவ்வளவோ சம்பளமும் சலுகையும் கொடுக்கிறது ஆனாலும் காசு ஆசையால் லஞ்சம் வாங்கும் போக்கு சிலரை ஆட்டிப்படைக்கிறது.மாட்டிக்கொள்ளும் போது எவ்வளவு அவமானம்.மதுரை மாவட்டம் காடுபட்டி எஸ்.ஐ.,ராஜ்குமார் பதினைந்தாயிரம் லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு போகும் போது தலையில் துண்டைப்போட்டு செல்கிறார்.
ரொம்பத்தான் சுறுசுறுப்பு... : சென்னை நுங்கம்பாக்கத்தில் ஐ.டி ஊழியர் சுவாதி கொலை சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடமான நிலையில், இப்போதுதான் கேமிரா பொருத்தும் வேலை நடைபெறுகிறது.
அளவா குளிடா மகனே... : வெயில் அதிகமாக இருக்கு தண்ணீர் குறைவா இருக்கு என்ன செய்ய மகனை சட்டியில் நிற்கவைத்து அளவோடு குளிப்பாட்டுகிறார் அந்த தண்ணீரையும் வீணாக்காமல் பயன்படுத்தக்கொள்வார் போலும்...படம்:சுரேஷ் கண்ணன்
பன்னீருக்கு இன்னும் ஏன் கண்ணீர்? : அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நீடிக்ககூடாது,சசி தரப்பினர் அதிமுக தலைமையகத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று டில்லி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துவிட்டு திரும்பிய ஒபிஎஸ் கண்ணை துடைத்துக் கொண்டே வந்தார்.
வேட்டிய கழட்டு... : பஸ் ஸ்டிரைக்கை முறியடிக்கும் வகையில், திண்டிவனத்தில் அரசு பஸ்சை அதிமுக ஒன்றிய செயலாளர் ஒட்டினார். இதைப்பார்த்த போராட்டக்காரர் ஒருவர், கரை வேட்டிய கட்டிக்கிட்டு பஸ்சை ஒட்டாதே என்று கோபத்துடன் போலீஸ் தடுப்பையும் தாண்டிச் சென்று அவரது வேட்டியை உருவினார்.
திருநங்கைகளின் நற்பணி... : சென்னை எண்ணுார் சுனாமி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் திருநங்கைகள் வெயில் பந்தல் வைத்து பொதுமக்களுக்கு நீர் மோருடன் தர்பூசணி பழங்களும் வழங்கினர்.
மடியேந்தி பிச்சை கேட்கிறோம்... : பீஹார் மாநிலத்தில், போலீசாருக்கு வழங்கும் சம்பளத்தை போலவே தங்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்று கேட்டு ஊர்க்காவல் படையினர் பாட்னாவில் மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Advertisement