X
Advertisement

போட்டூன்: 19-ஏப்-2017

சசிகலா அணி கலகலத்துப் போன நிலையில் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் ஆராவரமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.இந்த நிலையில் அங்கு வந்த அந்த அணியின் நாஞ்சில் சம்பத்.

புதுக்கோட்டை பழைய பஸ்நிலையத்தின் வாசலில் உள்ள எம்ஜிஆர் சிலையின் கையில் யாரோ ஒருவர் சாட்டை குச்சியை வைத்துள்ளார்.நாட்டு நடப்பு பிடிக்காமல் கொந்தளிப்புக்கு உள்ளான ஒரு தொண்டரின் வேலையாகத்தான் இது இருக்கும்.
குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை கிராமங்களிலும் ஏற்பட்டு வருகிறது.துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் ஆடு மேய்க்கும் பெரியவர் ரோட்டோராம் கசியும் தண்ணீரை குடிப்பதற்கு பிடிக்கிறார். அத்தியாவசிய தேவையான குடிநீர் கூட அனைவருக்கும் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது நமது நாட்டு நிர்வாகம்.


படம்:எஸ்.முப்பிடாதி

கோவை மாவட்டம் அன்னுார் அருகே காக்கா பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஏழு நாட்கள் பூட்டப்பட்டிருந்தது.இப்படி டாஸ்மாக் கடையை மூடினால் அரசாங்கத்தை எப்படி நடத்துறது, நாமதான் எப்படி பிழைக்கிறது என ஆட்சியாளர்கள் எண்ணியதன் அடிப்படையில் மூடிய கடை போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. அப்புறம் நாடும் மக்களும் என்னாவது என்று கேட்கிறீர்களா?என்ன அர்ப்பத்தனமான கேள்வி நாடும் மக்களும் நாசமாகப்போகட்டும் அதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை...

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்தானதை அடுத்து அங்கே முகாமிட்டிருந்த அரசியல் கட்சியினர் இடத்தை காலிசெய்து கொண்டு திரும்பினர்.அப்படி போனவர்களில் ஒருவர் கையைப் பிடித்து இதுவரை 'கவனித்ததற்கு' நன்றி தெரிவித்து கைகுலுக்கி பாராட்டியதுடன், ஒண்ணும் மோசம் போயிடல, திரும்ப வாங்க பழசெல்லாம் மறந்துட்டு முதல்ல இருந்து ஆரம்பியுங்கள் என்று சொல்லாமல் சொல்லி வழியனுப்பினர்.
இடைத்தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே. நகரில் மிகவும் களைகட்டியிருப்பது டாஸ்மாக் கடைகள்தான், எந்நேரமும் கூட்டம் ஜெ..ஜெ...என்றிருக்கிறது. முன்கூட்டியே சொல்லி வைத்திருப்பார்கள் போலும் 'தொப்பி பார்ட்டி' வந்தால் உடனே கவனித்து அனுப்பி விடுகின்றனர்.

சென்னை,பம்மலில் ஒரு ஒயின் ஷாப் கடையை மூடச்சொல்லி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் கடையை திறக்க சற்று தாமதமாகியது.காத்திருந்த குடிமகன்கள்,'என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் சரக்கு வாங்க நாட்டுல எவ்வளவு சிரமப்படவேண்டி இருக்கு' என்று அங்கலாய்த்தபடி காத்திருந்தனர்.

சென்னை ஆர்கேநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பில் காசுக்காக களமிறங்குபவர்கள் பொது இடம் என்று கூட பாராமல் பங்கு பிரிப்பதில் மோதிக்கொள்கின்றனர்.காசு,பணம்,துட்டுக்காக இங்கே காரசாரமான வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளவர்கள் தீபா பேரவையினர்.

சென்னை ஆர்கே நகரில் போட்டியிடும் தீபா பேரவை தீபாவின் பொதுக்கூட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட படகு சின்னத்தை காண்பித்து ஆதரவு கேட்கும் தொண்டர்கள். இதே சின்னம் அந்த பார்ட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்தால் ஐநுாறு ரூபாய் நோட்டில் படகு செய்து காண்பித்திருப்பார்களோ?
ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக.,வேட்பாளர் கங்கை அமரன் டீ கடையில் இருந்தபடி அங்கு வந்தவர்களுக்கு டீ வாங்கிகொடுத்து ஒட்டு சேகரித்தார். பண ஆறு ஒடும் ஆர்கே நகரில் டீ எந்த மூலைக்கு...

சேலம் கொண்டலாம்பட்டி நில அளவை அலுவலக சர்வேயர் லஞ்சம் கேட்டதை அடுத்து, அங்கு சென்ற தொழிலாளி ஒருவர்,' என் என் கையில் காசு இல்லை சர்வேயர் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்கிறார் ஆகவே அவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக எனக்கு தர்மம் பண்ணுங்கள்' என்று கேட்டு அலுவலகம் முன் துண்டை விரித்துப்போட்டு உட்கார்ந்திருந்தார்.

சென்னையில் வெப்பம் அதிகரிக்க துவங்கிவிட்டது.தலைமைச் செயலகத்தில் உள்ள குடிநீர் டாங்கில் எவ்வளவு தண்ணீர் ஊற்றிவைத்தாலும் இப்போது உடனே தீர்ந்துவிடுவதால் அடிக்கடி தண்ணீர் நிரப்புகிறார்கள்.


படம்:திருப்பதி

வெயிலில் நின்று வேலை பார்க்கும் திருச்சி போக்குவரத்து து போலீசாருக்கு நீர் மோர் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. நல்லா மோர் சாப்பிடுங்க கூலா வேலை செய்யுங்க.


படம்:வீரமணிகண்டன்.
பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன் ஜெ.,நினைவிடத்தில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் பெட்டியை வைத்து வணங்கி ஆசி பெறுகிறார .உருப்படியான பட்ஜெட்டை சமர்ப்பித்து மக்கள் ஆசீர்வாதத்தை பெறுவது இதைவிட முக்கியம்.


படம்:எஸ்.ரமேஷ்.

அடுத்து ஒரு அ.எ.அ.,தி.மு.க.,- திருச்சியில் எம்ஜிஆர் அண்ணன் மகன் எம்ஜிசந்திரனால் அண்ணா எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி துவங்கப்பட்டுள்ளது. படம்:வீரமணிகண்டன்.
சென்னை மைலாப்பூரில் நடந்த சசி அணி அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதியின் ஆவேசம்.


படம்:சத்யசீலன்,சென்னை
அமைச்சராக இருந்த வீட்டை காலி செய்யுங்கள் என்று சொன்னபிறகு, தாமதம் செய்யாமல் சென்னை கீரின்வேஸ் சாலையில் இருந்த வீட்டை காலிசெய்துவிட்டு ஆழ்வார்பேட்டை வீனஸ்காலனி வீட்டிற்கு குடிபுகுந்துவிட்டார் முன்னாள் முதல்வர் பன்னீர்.
கல்லுாரி மாணவியர் என்றால் கர்நாடக சங்கீதமும்,பரதநாட்டியமும் தான் ஆடவேண்டுமா?இதோ பண்ணிசையில் எங்கள் மண் இசையாம் பறைஇசையை இசைக்கிறேன் கேளுங்கள் என்றபடி மகளிர் தின கொண்டாட்டமாக பறையிசை இசைத்த சென்னை கல்லுாரி மாணவி விஜயலட்சுமி.
படம்:எல்.முருகராஜ்

சென்னையில் முக.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று அவருக்கு புத்தகம் பரிசாக வழங்கவந்த தொண்டர் ஒருவர், நெரிசலில் தன் வேட்டியை பறிகொடுத்த நிலையில் மேடையில் தோன்றி அனைவரது சிரிப்புக்கும் ஆளானார்.


படம்:சுரேஷ்கண்ணன்,சென்னை.

கோபியில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ள வந்த போது அவருடன் வந்தவர்களும் தனியாக சிவப்பு விளக்கு பொருத்திய சைரன் காரில் வந்தனர்.


 
Advertisement