Advertisement

போஸ்டர்ர்ர்...: 12-ஆக-2017

குழந்தை கிருஷ்ணர்... : கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நடந்த விழாவில் பங்கேற்ற குழந்தைகள்.
குடிப்பதற்கு ஒரு இடம் இல்லை... : டாஸ்மாக்கிற்கு எதிராக பெண்கள் பெரும்புரட்சி நடத்திக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிலும் இளைஞர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.சென்னை தாம்பரம் பகுதியில் குளிர்பானம் குடிப்பது போல ஒருவர் டாஸ்மாக் சரக்கை குடித்துக்கொண்டே நடக்கிறார்.படம்:மாரியப்பன்,தாம்பரம்.
மறக்க மனம் கூடுதில்லையே... : தகவல்கள் வாட்ஸ்அப்பிலும்,எஸ்எம்சிலும் இறக்கை கட்டி பறந்து கொண்டு இருக்கும் நிலையில் இப்போதும் தபால் பெட்டியை தேடி தபால் போடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இடம்:சென்னை வியாசர்பாடி.
மாறவே மாட்டீங்களாப்பா... : ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எங்கே போனாலும் வந்தாலும் பொதுமக்களைப் பற்றி கவலை இல்லாமல் நடைபாதை முழுவதையும் ஆக்ரமித்து பிளக்ஸ் பேனர் வைப்பார்கள் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த பிரச்னை இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் முளைத்துவிட்டது சென்னை திருவொற்றியூர் பாலத்தை திறந்துவைக்க வருகைதந்த முதல்வர் பழனிசாமியை வரவேற்று வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள்.
ஜெயலலிதா புத்தகம் அன்பளிப்பு : சென்னையில் நடந்துவரும் புத்தக திருவிழாவில் எம்ஜிஆர் பற்றிய புத்தகம் வாங்கினால் ஜெயலலிதா பற்றிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
ஆடிக்கு வா அல்லது ஆடிட்டு வா... : குடி மீட்பு மையங்கள் கேட்டு சென்னையில் மதுகுடிப்போர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு அடித்திருந்த போஸ்டர்.
மத்த புத்தகங்களையும் படிங்கப்பா... : பள்ளிப்பிள்ளைகளுக்கு பாடப்புத்தகங்களை தாண்டி யாரும் எதையும் படிக்க கொடுப்பதுமில்லை அவர்கள் படிப்பதுமில்லை இதனால் பொது அறிவிலும் மற்ற துறைகளிலும் மாணவர்கள் திறன்குறைந்து போகின்றனர்.சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற இருப்பதை முன்னிட்டு அங்கு பிள்ளைகளை வரவழைத்து பலவித புத்தகங்களை படிக்க கொடுத்தனர்.
பிடியுங்க,படியுங்க... : சென்னை மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,ஜெயின் கல்லுாரி மாணவியர் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரத்தை விநியோகித்தனர்.
பொறுப்பில்லாத்தனம்... : சேலம்-உளுந்துார்பேட்டை பாலத்தின் ஒரத்தில் கல்லைப்போட்டு அதில் கயிற்றைக்கட்டி பிளக்ஸ் பேனர் தொங்க விட்டுள்ளனர். இந்த விளம்பர ஆசை காரணமாக பாலத்தின் மீது இரவில் செல்லும் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதை உணர வேண்டாமா?
எல்லாமே பொய்யா? : மணல் கொள்ளை அடிப்பதற்காக பொய்யான கையெழுத்து,பொய்யான முத்திரை,பொய்யான பர்மிட்,பொய்யான ஸ்டிக்கர் என்று பல பொய்களுடன் கூட்டாக தப்பு செய்பவர்களை தடுத்து நிறுத்தக் கேட்கும் வகையில் திருவள்ளூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
ஒபிஎஸ் மீது கோபம்.. : தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.இது தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸில் அவரை பிடிக்காத அணியினர் காட்டிய கோபம் காரணமாக பிளக்ஸ் டார் டாராக கிழிந்து தொங்குகிறது.
வேண்டாம் டாஸ்மாக்... : தங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில் உடுமலை ஜல்லிப்பட்டியில் வீடு தோறும் கறுப்புக் கொடி ஏற்றியிருந்தனர்.
இப்பவேவா... : சென்னையில் கலைக்கல்லுாரிகள் இப்போதுதான் திறந்து கொண்டு இருக்கின்றனர், அதற்குள் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் தங்கள் கல்லுாரிக்கு வரும் அரசு பஸ்சின் மீது ஏறி ஆடியபடி வந்தனர்.
கருணாநிதி பாகுபலி அப்ப ஸ்டாலின்.. : கருணாநிதியின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் கருணாநிதியை பாகுபலி போல சித்தரித்திருந்தனர்.படம்:சதிஷ்,கோவை.
அரசு பள்ளியில் சேருங்கோ... : கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், கட்டணமில்லா கல்விதரும் அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேருங்கள் என்ற வாசகம் அடங்கிய அட்டையுடன், அரசு பள்ளி ஆசிரியைகள் சென்னையில் தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.நன்றாக சொல்லிக்கொடுத்தால் பிள்ளைகள் தானாக சேரப்போகின்றனர்.
புகையிலையை ஒழிப்போம்... : புகை நமக்கு பகை என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் நடத்திய விழிப்புணர்வு பிரச்சார நாடகம்.
புதுச்சேரியில் ஆலுமா..டோலுமா... : புதுச்சேரியில் ஆளும்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரசார் சபைக்கு வெளியே நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 'ஆலுமா டோலுமா சட்டம் ஒழுங்கு அவுட்டுமா' என்பது போன்ற வாசகங்களை பிடித்தபடி நின்றிருந்தனர்.
எடுங்க பழனிசாமி... : சென்னை புழல் பகுதியில் மதுக்கடையை மூடச்சொல்லி போராட்டம் நடத்தியவர்கள், சின்னசாமி பெரியசாமி மதுக்கடைகளை எடுங்க பழனிசாமி என்று முதல்வரை கேட்டுக்கொள்ளும் வாசகங்கள் கொண்ட பிரசுரத்தை வைத்திருந்தனர். படம்:சீனிவாசன்.
வந்த வரை லாபம்! : சென்னை தண்டையார் பேட்டையில் குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி போராட்டம் நடத்திய திமுகவினர் புதிதாக குடங்கள் வாங்கி பெண்கள் கையில் கொடுத்தனர்,போராட்ட முடிவில் பெண்கள் குடத்துடன் 'எஸ்கேப்' ஆனார்கள்.
தனியார் பஸ் அணிவகுப்பு... : அரசு பஸ் ஒட்டுனர்களின் வேலை நிறுத்தம் காரணமாக காலியான அரசு பஸ் நிலையங்களில் நேற்று தனியார் பஸ்கள் அணிவகுத்து நின்று பயணிகளுடன் சென்றன.இடம்:சென்னை கோயம்பேடு.
 
Advertisement