Advertisement

போஸ்டர்ர்ர்...: 12-ஜூலை-2017

பிடியுங்க,படியுங்க... : சென்னை மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,ஜெயின் கல்லுாரி மாணவியர் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரத்தை விநியோகித்தனர்.
பொறுப்பில்லாத்தனம்... : சேலம்-உளுந்துார்பேட்டை பாலத்தின் ஒரத்தில் கல்லைப்போட்டு அதில் கயிற்றைக்கட்டி பிளக்ஸ் பேனர் தொங்க விட்டுள்ளனர். இந்த விளம்பர ஆசை காரணமாக பாலத்தின் மீது இரவில் செல்லும் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதை உணர வேண்டாமா?
எல்லாமே பொய்யா? : மணல் கொள்ளை அடிப்பதற்காக பொய்யான கையெழுத்து,பொய்யான முத்திரை,பொய்யான பர்மிட்,பொய்யான ஸ்டிக்கர் என்று பல பொய்களுடன் கூட்டாக தப்பு செய்பவர்களை தடுத்து நிறுத்தக் கேட்கும் வகையில் திருவள்ளூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
ஒபிஎஸ் மீது கோபம்.. : தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.இது தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸில் அவரை பிடிக்காத அணியினர் காட்டிய கோபம் காரணமாக பிளக்ஸ் டார் டாராக கிழிந்து தொங்குகிறது.
வேண்டாம் டாஸ்மாக்... : தங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில் உடுமலை ஜல்லிப்பட்டியில் வீடு தோறும் கறுப்புக் கொடி ஏற்றியிருந்தனர்.
இப்பவேவா... : சென்னையில் கலைக்கல்லுாரிகள் இப்போதுதான் திறந்து கொண்டு இருக்கின்றனர், அதற்குள் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் தங்கள் கல்லுாரிக்கு வரும் அரசு பஸ்சின் மீது ஏறி ஆடியபடி வந்தனர்.
கருணாநிதி பாகுபலி அப்ப ஸ்டாலின்.. : கருணாநிதியின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் கருணாநிதியை பாகுபலி போல சித்தரித்திருந்தனர்.படம்:சதிஷ்,கோவை.
அரசு பள்ளியில் சேருங்கோ... : கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், கட்டணமில்லா கல்விதரும் அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேருங்கள் என்ற வாசகம் அடங்கிய அட்டையுடன், அரசு பள்ளி ஆசிரியைகள் சென்னையில் தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.நன்றாக சொல்லிக்கொடுத்தால் பிள்ளைகள் தானாக சேரப்போகின்றனர்.
புகையிலையை ஒழிப்போம்... : புகை நமக்கு பகை என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தினர் நடத்திய விழிப்புணர்வு பிரச்சார நாடகம்.
புதுச்சேரியில் ஆலுமா..டோலுமா... : புதுச்சேரியில் ஆளும்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரசார் சபைக்கு வெளியே நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 'ஆலுமா டோலுமா சட்டம் ஒழுங்கு அவுட்டுமா' என்பது போன்ற வாசகங்களை பிடித்தபடி நின்றிருந்தனர்.
எடுங்க பழனிசாமி... : சென்னை புழல் பகுதியில் மதுக்கடையை மூடச்சொல்லி போராட்டம் நடத்தியவர்கள், சின்னசாமி பெரியசாமி மதுக்கடைகளை எடுங்க பழனிசாமி என்று முதல்வரை கேட்டுக்கொள்ளும் வாசகங்கள் கொண்ட பிரசுரத்தை வைத்திருந்தனர். படம்:சீனிவாசன்.
வந்த வரை லாபம்! : சென்னை தண்டையார் பேட்டையில் குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி போராட்டம் நடத்திய திமுகவினர் புதிதாக குடங்கள் வாங்கி பெண்கள் கையில் கொடுத்தனர்,போராட்ட முடிவில் பெண்கள் குடத்துடன் 'எஸ்கேப்' ஆனார்கள்.
தனியார் பஸ் அணிவகுப்பு... : அரசு பஸ் ஒட்டுனர்களின் வேலை நிறுத்தம் காரணமாக காலியான அரசு பஸ் நிலையங்களில் நேற்று தனியார் பஸ்கள் அணிவகுத்து நின்று பயணிகளுடன் சென்றன.இடம்:சென்னை கோயம்பேடு.
நீருமில்ல.. மோருமில்ல... : சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திமுகவினர் வைத்துள்ள நீர் மோர் பந்தல் நீருமின்றி மோருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.
வேலூரில் காங்கிரஸ் என்னவாகும்... : வேலுார் மாவட்ட தலைமைப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பவர் செம்மரக்கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவராம், இனி வேலுாரில் காங்கிரஸ் சுத்தமா ஒழிஞ்சுடும் என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.கடத்தலில் ஈடுபட்டது தான் தகுதி என தலைமை நினைத்துவிட்டதோ?
தூக்குல தொங்குது பொது சுகாதாரம். : மருத்துவக் கல்லுாரிக்கான ஐம்பது சதவீத ஒதுக்கீடு நீடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் போராட்டம் நடத்திய மருத்துவக்கல்லுாரி மாணவர்கள்.தங்களது போராட்ட பந்தலில் பொது சுகாதாரம் என்று எழுதப்பட்ட பொம்மையை துாக்கில் தொங்கவிட்டிருந்தனர்.
சசிகலா இடத்தில் எடப்பாடி... : இபிஎஸ் அணி சார்பில் தற்போது வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களில் சசிகலா இருந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி படம் இடம் பெற்றுவருகிறது.
குடிசை அகற்றும் வாரியமா...? : சென்னையில் குடிசைகளை அகற்றும் அதே வேகத்தில் அகற்றிய குடிசை வீடுகளுக்கு மாற்றாக வீடுகள் தரவேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தினர்.
காட்டில் செல்பி எடுத்தால் அபராதம்... : போட்டோகிராபிக்கு கேடு ஏற்படுத்திவரும் செல்பி, இப்போது வனவிலங்குகளுக்கும் கேடு ஏற்படுத்தி வருகிறது.இனி காட்டில் உள்ள வன விலங்குகளுடன் செல்பி எடுக்கமுயன்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் விதத்தில் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வைக்கப்பட்டுள்ள போர்டு.
சரியா சொல்லுங்கய்யா... : சென்னை தாம்பரம் வரிவசூல் மையத்திற்கு மட்டும் விடுமுறை என அறிவிக்க எண்ணியவர்கள் நகராட்சி வாசலில் கொண்டுவந்து அந்த போஸ்டரை ஒட்டியதால், ஒட்டுமொத்த நகராட்சிக்கே விடுமுறை என்பது போலாகிவிட்டது பொதுமக்களை குழப்பாதீங்கப்பா.
 
Advertisement