Advertisement

போஸ்டர்ர்ர்...: 19-மே-2017

வந்த வரை லாபம்! : சென்னை தண்டையார் பேட்டையில் குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி போராட்டம் நடத்திய திமுகவினர் புதிதாக குடங்கள் வாங்கி பெண்கள் கையில் கொடுத்தனர்,போராட்ட முடிவில் பெண்கள் குடத்துடன் 'எஸ்கேப்' ஆனார்கள்.
தனியார் பஸ் அணிவகுப்பு... : அரசு பஸ் ஒட்டுனர்களின் வேலை நிறுத்தம் காரணமாக காலியான அரசு பஸ் நிலையங்களில் நேற்று தனியார் பஸ்கள் அணிவகுத்து நின்று பயணிகளுடன் சென்றன.இடம்:சென்னை கோயம்பேடு.
நீருமில்ல.. மோருமில்ல... : சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திமுகவினர் வைத்துள்ள நீர் மோர் பந்தல் நீருமின்றி மோருமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.
வேலூரில் காங்கிரஸ் என்னவாகும்... : வேலுார் மாவட்ட தலைமைப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பவர் செம்மரக்கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவராம், இனி வேலுாரில் காங்கிரஸ் சுத்தமா ஒழிஞ்சுடும் என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.கடத்தலில் ஈடுபட்டது தான் தகுதி என தலைமை நினைத்துவிட்டதோ?
தூக்குல தொங்குது பொது சுகாதாரம். : மருத்துவக் கல்லுாரிக்கான ஐம்பது சதவீத ஒதுக்கீடு நீடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் போராட்டம் நடத்திய மருத்துவக்கல்லுாரி மாணவர்கள்.தங்களது போராட்ட பந்தலில் பொது சுகாதாரம் என்று எழுதப்பட்ட பொம்மையை துாக்கில் தொங்கவிட்டிருந்தனர்.
சசிகலா இடத்தில் எடப்பாடி... : இபிஎஸ் அணி சார்பில் தற்போது வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களில் சசிகலா இருந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி படம் இடம் பெற்றுவருகிறது.
குடிசை அகற்றும் வாரியமா...? : சென்னையில் குடிசைகளை அகற்றும் அதே வேகத்தில் அகற்றிய குடிசை வீடுகளுக்கு மாற்றாக வீடுகள் தரவேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தினர்.
காட்டில் செல்பி எடுத்தால் அபராதம்... : போட்டோகிராபிக்கு கேடு ஏற்படுத்திவரும் செல்பி, இப்போது வனவிலங்குகளுக்கும் கேடு ஏற்படுத்தி வருகிறது.இனி காட்டில் உள்ள வன விலங்குகளுடன் செல்பி எடுக்கமுயன்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் விதத்தில் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வைக்கப்பட்டுள்ள போர்டு.
சரியா சொல்லுங்கய்யா... : சென்னை தாம்பரம் வரிவசூல் மையத்திற்கு மட்டும் விடுமுறை என அறிவிக்க எண்ணியவர்கள் நகராட்சி வாசலில் கொண்டுவந்து அந்த போஸ்டரை ஒட்டியதால், ஒட்டுமொத்த நகராட்சிக்கே விடுமுறை என்பது போலாகிவிட்டது பொதுமக்களை குழப்பாதீங்கப்பா.
இன்னும் கொஞ்ச நேரமாகட்டும்... : வெளியே வெயில் தாங்கமுடியல, பேசாம இந்த குண்டா தண்ணீருக்குள்ளேயே இருந்து இன்னும் கொஞ்ச நேரம் வருண ஜெபம் பண்ணுவோம்:இடம்:திருவண்ணாமலை வருணலிங்கம் கோவில்.
பரிதாப நிலையை பாருங்கள்... : விவசாயிகளின் பரிதாப நிலைமையை பலரும் பல்வேறு விதமாக சுட்டிக்காட்டி வருகின்றனர். அரியலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தியபடி போராடியவர்கள் இவர்கள்.
தினகரனின் முகமும் கிழியுது... : ஆர்கே நகர் இடைத் தேர்தல் தள்ளிப் போனதிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொப்பி அணியின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.முன்பெல்லாம் சசிகலாவின் முகத்தை மட்டும்தான் போஸ்டரில் பார்த்து கிழித்துக்கொண்டு இருந்தனர் இப்போது தினகரன் முகத்தையும் சேர்த்து மக்கள் கிழிக்கத்துவங்கிவிட்டனர்.படம்:எஸ்.ரமேஷ்
தெரு ஒரக்குழந்தைகளை கவனிப்பீர்... : சென்னையில் தெரு ஒரக்குழந்தைகளின் நலனை முன்னிறுத்தி நடைபெற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற குழந்தைகள்.
மூடிய கடையை திறக்காதே... : மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தி திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சமூக ஆர்வலர்.படம்:வீரமணிகண்டன் திருச்சி.
அவங்க ரெடியாகிட்டாங்க... : புதிதாக வந்துள்ள இரண்டாயிரம் மற்றும் ஐநுாறு ரூபாய் கள்ள நோட்டுகளை, குடிசை தொழில் போல தயாரிக்க கரூரில் ஒருவர் தயராகிக்கொண்டிருந்த போது போலீசார் தகவல் அறிந்து லபக்கினர்.போலீசார் கையில் சிக்காமல் எங்கெல்லாம் பிரிண்ட்டாகி கொண்டிருக்கிறதோ.
சுப்பிரமணியனுக்கு ஒரு சபாஷ்... : விவசாயத்தையும்,விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் என்ற பத்து அம்ச கோரிக்கையைமுன்வைத்து, கல்லுாரி மாணவர் சுப்பிரமணியன் என்பவர் தமிழகம் முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு துண்டு பிரசுரம் விநியோகித்து வருகிறார்.
புதுசா ஒரு அடையாளக்குறி... : சென்னை ஆர்கேநகர் தொகுதியில் பல வீடுகளின் வாசலில் இப்படி ஒரு அடையாள குறி காணப்படுகிறது.எத்தனை ஒட்டு இந்த வீட்டில் இருக்கிறது என்பற்க்கான அடையாளமா? அல்லது எத்தனை பேருக்கு துட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை சொல்லும் அடையாளமா? தெரியவில்லை.
பெண் குழந்தைகளை காப்போம்... : மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்து வரும் பெண்கள் திருவிழாவில், பெண் குழந்தைகளை காப்பாற்ற கேட்கும் பதாகைகளுடன் வலம்வந்த பெண்கள்.
நாதியற்ற விவசாயிக்கு நீதி வழங்கு... : டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் நலனிற்கு ஆதரவாக திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மகனுடன் போராட வந்த விவசாயி.
காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் : காச நோய் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் ஊர்வலம் சென்ற மாணவியர் நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
 
Advertisement