Advertisement

போஸ்டர்ர்ர்...: 19-ஏப்-2017

இன்னும் கொஞ்ச நேரமாகட்டும்... : வெளியே வெயில் தாங்கமுடியல, பேசாம இந்த குண்டா தண்ணீருக்குள்ளேயே இருந்து இன்னும் கொஞ்ச நேரம் வருண ஜெபம் பண்ணுவோம்:இடம்:திருவண்ணாமலை வருணலிங்கம் கோவில்.
பரிதாப நிலையை பாருங்கள்... : விவசாயிகளின் பரிதாப நிலைமையை பலரும் பல்வேறு விதமாக சுட்டிக்காட்டி வருகின்றனர். அரியலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தியபடி போராடியவர்கள் இவர்கள்.
தினகரனின் முகமும் கிழியுது... : ஆர்கே நகர் இடைத் தேர்தல் தள்ளிப் போனதிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொப்பி அணியின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.முன்பெல்லாம் சசிகலாவின் முகத்தை மட்டும்தான் போஸ்டரில் பார்த்து கிழித்துக்கொண்டு இருந்தனர் இப்போது தினகரன் முகத்தையும் சேர்த்து மக்கள் கிழிக்கத்துவங்கிவிட்டனர்.படம்:எஸ்.ரமேஷ்
தெரு ஒரக்குழந்தைகளை கவனிப்பீர்... : சென்னையில் தெரு ஒரக்குழந்தைகளின் நலனை முன்னிறுத்தி நடைபெற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற குழந்தைகள்.
மூடிய கடையை திறக்காதே... : மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தி திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சமூக ஆர்வலர்.படம்:வீரமணிகண்டன் திருச்சி.
அவங்க ரெடியாகிட்டாங்க... : புதிதாக வந்துள்ள இரண்டாயிரம் மற்றும் ஐநுாறு ரூபாய் கள்ள நோட்டுகளை, குடிசை தொழில் போல தயாரிக்க கரூரில் ஒருவர் தயராகிக்கொண்டிருந்த போது போலீசார் தகவல் அறிந்து லபக்கினர்.போலீசார் கையில் சிக்காமல் எங்கெல்லாம் பிரிண்ட்டாகி கொண்டிருக்கிறதோ.
சுப்பிரமணியனுக்கு ஒரு சபாஷ்... : விவசாயத்தையும்,விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் என்ற பத்து அம்ச கோரிக்கையைமுன்வைத்து, கல்லுாரி மாணவர் சுப்பிரமணியன் என்பவர் தமிழகம் முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு துண்டு பிரசுரம் விநியோகித்து வருகிறார்.
புதுசா ஒரு அடையாளக்குறி... : சென்னை ஆர்கேநகர் தொகுதியில் பல வீடுகளின் வாசலில் இப்படி ஒரு அடையாள குறி காணப்படுகிறது.எத்தனை ஒட்டு இந்த வீட்டில் இருக்கிறது என்பற்க்கான அடையாளமா? அல்லது எத்தனை பேருக்கு துட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை சொல்லும் அடையாளமா? தெரியவில்லை.
பெண் குழந்தைகளை காப்போம்... : மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்து வரும் பெண்கள் திருவிழாவில், பெண் குழந்தைகளை காப்பாற்ற கேட்கும் பதாகைகளுடன் வலம்வந்த பெண்கள்.
நாதியற்ற விவசாயிக்கு நீதி வழங்கு... : டில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் நலனிற்கு ஆதரவாக திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மகனுடன் போராட வந்த விவசாயி.
காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் : காச நோய் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் ஊர்வலம் சென்ற மாணவியர் நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
ஆசையிருக்கு,காசு இல்லையே... : சென்னையின் வெப்பத்தை தவிர்க்க எங்கு திரும்பினாலும் தர்பூசணி விற்பனை கொடிகட்டி பறக்கிறது.இதெல்லாம் காசுள்ள மக்களுக்கு நமக்கு எங்கே என்ற எண்ணத்துடன் நடைபோடும் மாடு.படம்:சுரேஷ் கண்ணன்.
தீபா மட்டும்தான் மாதவன் இல்லை... : தீபாவிற்கும் கணவர் மாதவன் பேட்ரிக்கிற்கும் உரசல் ஏற்பட்டதை அடுத்து தீபா பேரவை பேனரில் இருந்த மாதவன் பெயர் கிழிக்கப்பட்டுள்ளது.இடம்:சென்னை.
பாட்டிலை போடாதே... : சமூகத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களை குடிக்கு அடிமையாக்கியாச்சு...அதனால இனி குடிக்காதே என்று சொன்னால் கேட்கப்போவது இல்லை, குறைந்தபட்சமாக இதெல்லாம் முக்கியமான இடம் அதுனால குடிச்சுட்டு பாட்டிலை போடாதே என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.இடம்:கோவை அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம்.படம்:சதீஷ்குமார்
படவிளக்கம்: ரேஷன் பொருட்கள் கிடைக்காதததை கண்டித்து சென்னையில் திமுகவினர் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்:எஸ்.ரமேஷ்.
வாங்கய்யா வந்து மாத்துங்கய்யா : ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அவரது ரசிகர்கள் இது போல போஸ்டர் மூலம் அழைப்பு விட்டு அந்த அழைப்பிற்கு வெள்ளி விழாவே முடிந்துவிட்டது ஆனாலும் அழைப்பு விடுவதை ரசிகர்கள் விடுவதாக இல்லை.கோவை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்.படம்:சதீஷ்குமார்,கோவை.
படிச்சதா வரணும்... : பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வரும் வேளை இது.மாணவ,மாணவியரின்பிரார்த்தனைகள் அதிகரித்து வருகிறது.
'மலர்'ந்த முகமே வருக : மகளிர் தினத்தை வரவேற்கும் விதத்தில், சென்னை கல்லுாரி மாணவி ஒருவர் தன் முகத்தில் மகளிர் தின வரவேற்பு வாசகங்களும், அதற்கான வண்ணங்களும் இடம் பெறும்படி செய்துவிட்டார்.படம்:சந்திரசேகர்.
என்னய்யா சொல்ல வர்றீங்க... : சென்னையில் முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கட்டப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டில் செம்மொழிக் கலைஞரின் செல்பியே என்று வாழ்த்தியிருந்தனர்.படம்:எஸ்.ரமேஷ்,சென்னை.
வேண்டும் வேகத்தடை... : சென்னை ஆவடியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் வேகமாக செல்லும் வா கனங்களை கட்டுப்படுத்த வேகத்தடை வேண்டும் என்று கோரிக்கையை எழுதி போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
 
Advertisement