Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 10-நவ-2018

அகல்விளக்கு தயார்! : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிதம்பரம் அடுத்த துணிசி ரமேடு கிராமத்தில் அகல் விளக்கு செய்து காயவைக்கும் பணியில் ஈடுபடும் பெண் தொழிலாளி.
மிளகாய் சாகுபடி! : திருப்பூர் அருகே கணபதிபாளையத்தில் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
அந்தரத்தில் வாழ்க்கை! : வயிற்று பிழப்புக்காக கயிற்றில் நடக்கும் சிறுமி. இடம் லெலின்வீதி, புதுச்சேரி.
களை எடுப்பு! : சிதம்பரம் அடுத்ததுணி சிரமேடு கிராமத்தில் வயல்வெளியில் களையெடுக்கும் பெண்கள்.
விலை இல்லை! : இந்த வருடம் பருவமழை போதிய அளவு பதிவானதால் தக்காளி விளைச்சல், வரத்தும் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்து விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. இடம்: கோவை அடுத்த நவக்கரை.
கன்றுகுட்டி! : சமீபத்தில் காட்டு எருமை ஒன்று கன்றுகுட்டி ஈன்றது. குட்டியுடன் காட்டு எருமைகள் வலம் வந்ததை பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இடம்: வண்டலூர் உயிரியல் பூங்கா.
அகல் விளக்கு! : திருக்கார்த்திகையையொட்டி உடுமலை பள்ளபாளையத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
புதுவரவு! : வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த வாரம் புதியதாக வந்த அணில்வால் குரங்கு.
அழகு மயில்! : மழைக் காலம் என்பதால் உணவு சேகரித்த களைப்பில் உட்கார்ந்துள்ளதோ மயில். இடம்: திருப்பூர், பூம்புகார் நகர்.
மழையால் பயன்! : மழையின் பயனாய் நத்தை போன்ற சின்ன சின்ன அறிய உயிரினங்கள் தலை காட்டுகிறது. இடம்: கோவை, ராசிபாளையம்.
 
Advertisement