Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 11-அக்-2018

துவங்கியாச்சு! : ராமநாதபுரம் அருகே புத்தேந்தலில் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
திரும்பிய பசுமை! : கோவை சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் மேய்ச்சல் நிலங்கள் பசுமைக்கு திரும்பியுள்ளது. இடம்: சீரபாளையம், கோவை.
தனித்துவம்! : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை நொளம்பூரில் ஒருவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான கொலு...
ஜோரா பறக்குது! : திருப்பூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், செயற்கை மழை பொழிய வைக்கும் ஆளில்லா விமானத்தை காட்சிபடுத்திய மாணவன்.
எங்கும் பசுமை! : உடுமலை குமரலிங்கம் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வளர்ந்து பச்சை பசேலென காணப்படுகிறது.
நவராத்திரி ஸ்பெஷல்! : நவரத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சங்குகளை கொண்டு போடப்பட்ட கோலம்.
மாட்டிக்கிட்டோம்! : ஆடி பாடி திரிந்த இடம் மறந்து, இப்படி கூண்டில் அடையும் நிலை. இடம்: கோவை வ.உ.சி., பூங்கா.
பூவே.. பூவே.. : உடுமலை குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள மரத்தில் பூத்துள்ள நாகலிங்க பூக்கள்.
மடை திறந்த வெள்ளமாய்! : உடுமலை அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொழுமம் அமராவதி ஆற்றில் பாய்ந்தோடி செல்கிறது.
விவசாயி! : கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பதப்பட்டிருந்த தன் நிலத்தை டிராக்டர் மூலம் உழும்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டிருக்கும் விவசாயி. இடம் : உளுந்தூர்பேட்டை அருகே.
 

Download for free from the Store »

Advertisement