Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-செப்-2018

எருக்கம் பூ மாலை! : சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு குவிந்துள்ள எருக்கம் பூ மாலைகள்.
வண்ணம் பூசும் பணி! : நொய்ந்து போன தபால் துறை மீண்டும் மத்திய அரசால் புத்துணர்ச்சி பெற்றதால் கோவை கோர்ட் வளாகத்திலுள்ள தபால் பெட்டிக்கு வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
கிராமத்து மணம்! : கோழி குஞ்சுகளுக்கு இரை போடும் குழந்தை. இடம்: உடுமலை நல்லாறு குடியிருப்பு .
ஊடுபயிர்! : திண்டுக்கல் அருகே சித்தூர் பகுதியில் வாழையில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.
குப்பையிலே..! : தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விற்பனையாகாத தக்காளி பழங்களை உடுமலை சந்தை குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.
இயற்கை முறையில்..! : அரிசி, இலை, பூக்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு இயற்கை முறையில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய சென்னை தனியார் கல்லூரி மாணவியர். இடம்: அண்ணாநகர்.
விநாயகர் குடை! : விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு திருப்பூர், தினசரி பூ மார்க்கெட் பகுதியில் விநாயகர் குடை விற்பனைக்கு வந்துள்ளது.
விநாயகா! : வரம் தரும் விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி என்பதால் கோவை பூ மார்க்கெட்டில் ஆர்வமுடன் ரசித்து வாங்கி செல்லும் பெண்கள்.
மக்கள் கூட்டம்! : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூர் பூ மார்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்.
வைகை நதி! : சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்ட வைகை தண்ணீர் மதுரையை கடந்து சென்றது.
 
Advertisement