Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-ஜூலை-2018

அழகோ.. அழகு..! : ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில், மழை மற்றும் மேகமூட்டத்தை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
காவலாளி..! : சோலைகாட்டு பொம்மை சொக்க வைக்கும் அழகில் காத்து நிற்கிறது வயலின் நடுவே காவலாளியாக. இடம்: கோவை காளம்பாளையம்.
மகிழ்ச்சி..! : கோவையில் பெய்த மழையால் குளத்தில் நீர் வரத்து அதிகரித்த மகிழ்ச்சியில் பறக்கும் பறவைகள் இடம்: வாலங்குளம்.
உயரும் நீர்மட்டம்! : நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் உடுமலை அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கண்களுக்கு விருந்து! : பெசன்ட் அவின்யூ சாலையில் இருபுறமும் பூத்துகுலுங்கும் வண்ணமயமான பூக்கள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு விருந்து படைகின்றன. இடம்:பெசன்ட் நகர், சென்னை.
தாமரை மலர்கள்! : சிவகங்கை மாவட்டம் மடைக்கரைப்பட்டி கண்மாயில் பூத்து குலுங்கும் தாமரை மலர்கள்.
நெல்லிக்காய்கள்! : விருதுநகர், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விளைந்துள்ள நெல்லிக்காய்கள்.
பொம்மைகள் ரெடி! : காத்திருக்கும் குதிரை பொம்மைகள், தன்னை காணவரும் குழந்தைகளை எதிர்நோக்கி. இடம்:திருப்பூர், அணைப்புதூர்.
அறுவடைக்கு தயார்! : சிவகங்கை அருகே அரளிக்கோட்டை பகுதியில் கிணற்று பாசனத்தில் பயிரிட்டு அறுவடை தயார் நிலையில் உள்ளது.
காத்திருப்பு! : ராமநாதபுரம் அருகே நதிப் பாலம், கடற்கரைப் பகுதியில் இரைக்காக காத்திருக்கும் கொக்குகள்.
 
Advertisement