Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 12-ஜூலை-2018

விழிப்புணர்வு பேரணி! : உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, கோவை கலெக்டர் அலுவலகத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட கல்லுாரி மாணவிகள்.
மகரந்ததை நாடி..! : மணக்கும் மகரந்ததை நாடி மலரில் முகாமிட்டுள்ளதோ இந்த தேனீ. இடம்: மதுரை எஸ்.எஸ்.காலனி.
மேகம் கருக்குது! : சென்னையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இடம்:சென்ட்ரல்.
நீரூற்றுகள்! : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உடுமலை திருமூர்த்திமலை பாறைகளில் வழிந்தோடும் நீரூற்றுகள்.
மலரே..! : ஊட்டி தாவரவியல் பூங்காவிலுள்ள, ஆர்னமன்டல் கேல் வகை மலர்கள், சுற்றுலா பயணிகளை கவர்கிறது.
விடாத மழையிலும்! : கோவையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு குடையுடன் செல்லும் குழந்தைகள். இடம்: பி.என்.புதூர்.
எங்கும் பசுமை! : மழையால் புடலங்காய் விவசாயம் செழித்து, பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இடம்: திருப்பூர், மங்கலம் ரோடு.
வருகை அதிகரிப்பு! : கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து குளங்களும் நிரம்பி வருகிறது. இதனால் அனைத்துக் குளங்களிலும் பறவைகள் வருகை அதிகரித்து வருகிறது.
ஆர்ப்பரிப்பு! : மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்வதால், உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வெண்மேகம்! : லேசான சாரல் மழையின் போது பழநி - கொடைக்கானல் மலையை தழுவிச்சென்ற வெண்மேகக்கூட்டம்.
 
Advertisement