Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-ஜூன்-2018

ஆர்ப்பரிக்கும் வெள்ளம்! : தொடர் மழையால் கோவை குற்றாலத்தில் ஆர்ப்பரித்து வரும் வெள்ளம்.
பந்தலிலே தொங்குதடி! : திருப்பூர், உடுமலை ஜல்லிபட்டி வயல்களில் போடப்பட்டுள்ள பந்தல்களில் காய்த்துதொங்கும் புடலங்காய்கள்.
தண்ணீர்வரத்து அதிகம்! : நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால் உடுமலை அமராவதி அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
விடுமுறை..! : கனமழை காரணமாக கோவை மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து வீட்டிற்கு திரும்பும் மாணவ, மாணவியர். இடம் ஹோப் காலேஜ்.
விற்பனைக்கு! : சென்னை கோயம்பேடு மார்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சப்போட்டா பழங்கள்.
சீறிப்பாய்கிறது! : முல்லைப் பெரியாறு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தேனி வீரபாண்டி ஆற்றில் சீறிப்பாய்ந்தது.
கண்ணுக்கு விருந்து! : உடுமலை மானுப்பட்டி ரோட்டின் இருபுறமும் மரங்கள் பசுமையுடன் காட்சியளிக்கிறது.
அருவி! : தொடர் மழையால் கோவை சிறுவாணி மலை பகுதிகளில் பல்வேறு அருவிகளில் கொட்டும் வெள்ளம்.
உயருது நீர்மட்டம்! : நீலகிரியில், தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால், ஊட்டி அருகே எமரால்டு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இது புதுசு! : பாம்பன் ரயில் பாலத்தில் பழைய கர்டர் அகற்றப்பட்டு புதிய கர்டர் அமைக்கப்பட்டது.
 
Advertisement