Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 17-மே-2018

ரம்மியம் : கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பழநி நகராட்சி கோடைகால நீர்த்தேக்கம் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
விதைபந்து : திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்கள்.
ஒயிலாட்டம் : சூலூர் அடுத்த அருகம்பாளையத்தில் ஒயிலாட்ட குழுவின் அரங்கேற்ற விழா நடந்தது.
தவழ்ந்து வருதே : நீலவண்ண வானில் வெள்ளை நிற மேக கூட்டங்கள் தவழ்ந்து வந்தது.இடம்: சிவகங்கை 48 காலனி குடியிருப்பு பகுதி.
கஷ்டாமிருக்கு...! : வானத்திற்கும்,ரோட்டிற்கும் பாலம் அமைக்கலாம். போலிருக்கு இந்த வண்டி பின்னால போன எனக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்.இடம்: மதுரை.
பூத்துக்குலுங்குது...! : பழநி அருகே கோம்பைபட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் வெண்டைப்பூக்கள்.
உல்லாச பயணம்...! : ஊட்டியில், இரண்டு மணி நேரம் கனமழை பெய்ததால் மழையின் நடுவே படகில் உல்லாச பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள்.
பச்சை நிறமே...! : சில தினங்களாக பெய்துவரும் மழையால் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து அப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.இடம்: சிவகங்கை அருகே வாணியக்குடி.
சீசன் துவங்கிடுச்சு...! : முந்திரி சீசன் துவங்கி உள்ளதால் சிவகங்கை பையூர் பகுதியில் அதிகமாக முந்திரி காய்ந்து வருகிறது.
ஆபத்தை உணரமாட்டாங்க...! : இது போன்று பயணம் மேற்கொள்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இடம்: திண்டிவனம், விழுப்புரம்.
 
Advertisement