Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 17-ஏப்-2018

யாரும் கண்டிக்கல...! : பொள்ளாச்சி குளேஸ்வரன்பட்டி அருகே அதிகளவிலான எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோ.
சாப்பிட கிடைச்சுருச்சு..! : பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் கடந்த வாரம் பெய்த கோடை மழையால் பசுமை திரும்பி வன உயிரினங்கள் உணவு பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.
நல்ல கிராக்கி..! : கொடைக்கானலில் பீச்சஸ்காய்ப்பு துவங்கி/யுள்ளதால் பழச்சந்தைகளில் வரத்து அதிகரித்துள்ளது.
அனலாய் கொதிக்குதே..! : : பழநி - பைபாஸ் ரோட்டில் தண்ணீர் ஓடுவது போல் தெரிந்த கானல் நீர்.
நல்ல விளைச்சல்..! : : 2 ஆம் போக நெல் நடவுக்காக விவசாயிகள் வயல்களை தயார் செய்து வைத்துள்ளனர் இடம்: பழநி வையாபுரிகுளம் அருகே.
அறுவடைக்கு ரெடி...! : அறுவடைக்கு காத்திருக்கு நெல் மணிகள் இடம் : திருநீர்மலை
சூடு தாங்க முடியலிங்கோ..! : கோடையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சவரில் குளித்து சூட்டை தணிக்கு யானை
அழகான பூ...! : : பழநி - பைபாஸ் ரோட்டில் அழகாய் பூத்துள்ள பூக்கள்.
பசுமை பாதை...! : மழையில்லாமல் பல இடங்கள் காய்ந்த நிலையிலும் பழநி முருகன் கோயில் ரோப்கார் செல்லும் பாதையில் பசுமை நிறைந்து பக்தர்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
சந்தோஷ செல்பி : 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடித்த மாணவியர் செல்பி எடுத்து மகிழ்ந்து கொண்டனர். இடம் கோவை செயிண்ட் மேரிஸ் பள்ளி
 
Advertisement