Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 15-பிப்-2018

காத்திருந்த வாத்துகள் : பழநி ஆயக்குடி பெரியகுளத்தில் தண்ணீருக்கு நடுவே இரைக்காக காத்திருந்த வாத்துகள்.
துள்ளும் நடனம், மயக்கும்பாடல்கள் : கோவை நவ இந்தியாவில் இந்துஸ்தான் கல்லூரியில் ஹிலாரிகஸ் 2018 கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துள்ளும் நடனம், மயக்கும் பாடல்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.
கூடைப்பந்து போட்டி : கோவை நீலாம்பூர் சக்தி இன்ஜி., கல்லூரியில் கூடைப்பந்து போட்டி நடந்தது.
பாரம்பரிய நடனம் : நீலகிரி மாவட்டம் ,மஞ்சூர் அருகே குந்தா கோத்தகிரியில், கோத்தரின பழங்குடி மக்கள் ஆட்டபபூப் பண்டிகையில் (நடன பண்டிகை ) பெண்கள் தாங்கள் பாரம்பரிய நடனமாடினர்கள்.
பால் குடம் : பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பெண்கள். இடம்:திருவல்லிக்கேணி.
அலகு குத்தி.. : பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு அலகு குத்தி ஊர்வலமாக பக்தர். இடம்:திருவல்லிக்கேணி. படம்:சத்தியசீலன்.
கவர்ந்த ஓவியம் : கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த மணல் ஓவியம்.
கொண்டாட்டம் : காதலர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இளைஞர்கள் பலூன் பறக்க விட்டும் கேக் வெட்டியும் கொண்டாடினர்.
கலை நிகழ்ச்சி : கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்.
அன்புக்கு மொழி, : அன்புக்கு மொழி, சாதி, மதம் பணம் இவை ஏதும் தேவை இல்லை எவரிடமும் அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பது அன்பு மட்டும். இடம் : கோவை இருகூர்
 
Advertisement