Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-பிப்-2018

கதிரவன் அழகு! : அந்திசாயும் நேரத்தில் தனது ஒளியை பரவவிட்டு கதிரவன் மறையும் காட்சி காண்போரை பரவசமடையச் செய்கிறது இடம்: மடத்துக்குளம்
மரவியல் பூங்கா! : ஊட்டி பஸ் ஸ்டாண்டு அருகே அமைந்துள்ள மரவியல் பூங்கா.
துள்ளிய டால்பின்கள்! : சாயல்குடி அருகே கடலில் துள்ளிக் குதித்த டால்பின்கள்.
இலையுதிர் காலம்! : பசுமை மறைய இலையுதிர் காலம் இங்கே நெருங்கியது என புரிய வைக்கிறது இம்மரங்களின் நிலை. இடம்: கோவை வீரகேரளம் ரோடு.
காதலர் தினம்...! : காதலர்கள் தினத்தையடுத்து சென்னை பூக்கடை பகுதியில் உள்ள செயற்கைப் பூக்கள் உள்ள காதல் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கும் பெண்கள்.
நல்லா குளிச்சேன்! : நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகம், கெம்ப் யானையை மாயாற்றில் குளிப்பாட்டி விட்டு அழைத்து செல்லும் பாகன்.
காவடி ஆட்டம்! : தைப்பூச விழாவை தொடர்ந்து பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த பக்தர் காவடி எடுத்து ஆடி வந்தார்.
இரை தேடி வந்த புறாக்கள்! : பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இரை தேடி வந்த புறாக்கள்.
கோழிக்கொண்டை பூக்கள்! : திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கோழிகொண்டை பூக்கள் அறுவடைக்கு தயாராகியுள்ளது.
மக்காச்சோள அறுவடை! : பழநி கணக்கன்பட்டி பகுதியில் விளைந்த மக்காச்சோளக் கதிர்களை எந்திரம் மூலம் பிரிக்கும் பணி நடந்தது.
 
Advertisement