Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-ஜன-2018

கும்மியடி.. பெண்ணே... : ராமநாதபுரம் அன்பு இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் நடராஜன் பங்கேற்றார்.
கரும்பை கடி! : பொங்கல் விழா கொண்டாடிய மாணவிகள் மாட்டு வண்டியில் பயணித்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். இடம்: கோவை எஸ்.என்.ஆர், கலை அறிவியல் கல்லூரி
வாங்கியாச்சு! : பொங்கல் விழாவை முன்னிட்டு தேனி வாரச்சந்தையில் கூரைப்பூ தேர்வு செய்யும் பெண்.
வருங்கால தூண்கள்! : சட்டசபை கூட்ட நிகழ்வுகளை காண வந்த சென்னை செம்மஞ்சேரி ஜேப்பியார் பள்ளி மாணவிகள். இடம்: தலைமை செயலகம்..
பொங்கலோ.. பொங்கல்..! : சிவகங்கையில் அரசு ஊழியர்கள் சார்பில் சுகாதார பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தித்திக்கும் கரும்பு! : பொங்கலையொட்டி உடுமலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கரும்புகள்.
சும்மா ஒரு செல்பி! : அருப்புக்கோட்டை பொங்கல் விழாவில் பட்டுப்புவைகளுடன் செல்பி எடுத்துக்கொண்ட மாணவிகள்.
இடம் கிடைக்குமா! : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம். இடம் : எழும்பூர்.
நெருப்பில் சாகசம்! : கோவை விழாவின் ஒரு பகுதியாக சிலம்பம் விழா வ.உ.சி., மைதானத்தில் நடந்தது. இதில் சாகசத்தில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகள்.
புத்தகக் கண்காட்சி... : பபாசி அமைப்பின் சார்பில் 41வது புத்தகக்கண்காட்சி சென்னை கீழ்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தனக்குப்பிடித்த புத்தகங்களை ரசித்து பார்க்கும் சிறுமி.
 
Advertisement