Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-அக்-2017

விளைச்சல் அமோகம்...! : திருமங்கலம் குண்டாற்றுக்குள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர் பச்சை பசேல் என வளர்ந்துள்ளது.
நிரம்பிடுச்சு...! : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே புதுக்குளம் கண்மாய் நிரம்பி வருகிறது.
நிறைஞ்சுருக்கு...! : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடரும் மழையால் எமரால்டு நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
குறைஞ்சு போச்சு..! : கேர்ஜ்ஹில் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் வெறிச்சோடி காணப்படுகிறது.
எழில் தோற்றம்,,,,! : கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் தென்னை வாழைகள் இடையே எழில்மிகு தோற்றத்துடன் பூத்து குலுங்கும் செண்டு பூக்கள்.
விழிப்புணர்வு..! : உலக பார்வை தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் படும் சிரமங்களை உணர்தும் விதமாக கண்களைக்கட்டிக்கொண் விழிப்புணர்வு பேரணி நடத்திய மருத்துவ மாணவர்கள். இடம்- கஸ்தூரிபாய் மருத்துவமனை, திருவல்லிக்கேணி.
நாங்க புதுசுங்க...! : கலாஷேத்ரா பவுண்டேஷனில் நடைபெறும் சந்தை திருவிழாவில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள வடமாநில பாராம்பரிய பொம்மலாட்ட பொம்மைகள். இடம் : திருவான்மியூர்.
ஆர்ப்பரிக்குது...! : கோத்தகிரி அருகே உயிலட்டியில், தொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் நீர்விழ்ச்சி.
பறவைகள் பலவிதம்...! : பருவத்தின் மாற்றம், பறவைகளின் சந்தோஷம் என சிறகடித்து பறக்கின்றன இந்த பறவைகள். இடம்: கோவை சிங்காநல்லூர்.
ரோடு தெரியலைய..! : கோத்தகிரி - கட்டபெட்டு சாலையில், மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் திணறினர்.
 
Advertisement